ஷாரூக்கானுக்கு பிறகு அந்த ஒரு வாய்ப்பை பெற்ற விக்ரம்! சீயான் வேற லெவல்

by Rohini |   ( Updated:2024-09-08 11:58:35  )
vikram
X

vikram

Vikram:கோலிவுட்டில் ஒரு நடிப்பு அசுரனாக இருப்பவர் நடிகர் விக்ரம். சீயான் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் .ஆரம்பத்தில் பல இன்னல்களையும் போராட்டங்களையும் கடந்தும் இன்று ஒரு உச்சம் தொட்ட நடிகராக மாறி இருக்கிறார் விக்ரம்.

சேது திரைப்படம் தான் அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. அந்த படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ஒரு சிறந்த நடிகர் என அனைவராலும் பாராட்டப்பட்டார். அதன் பிறகு வெளியான திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அவருக்கு என ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் விக்ரம்.

இதையும் படிங்க: 5வது நாளில் கோட் படத்தோட வசூல் எவ்வளவு வரும் தெரியுமா? அதான் சொல்லிட்டாருல்ல..!

கமலுக்கு அடுத்தபடியாக விதவிதமான கெட்டப்புகள் போட்டு சினிமாவில் நடிப்பவர் விக்ரம். சினிமாவிற்காக நடிப்பிற்காக மிகவும் மெனக்கிடுபவர். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த தங்கலான் திரைப்படம் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது.

அதில் விக்ரமின் நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. அடுத்ததாக வீர தீர சூரன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் உலகப்புகழ் பெற்ற சினிமா நிறுவனமான imdpக்கு விக்ரம் சமீபத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஏன்மா உன் வாய் சும்மா இருந்து இருக்கலாமே? கோட் தங்கச்சியால் அசிங்கப்படும் வெங்கட் பிரபு

அந்த பேட்டியில் தன்னுடைய சினிமா சம்பந்தமான விஷயங்கள் , அதற்கான என்னெல்லாம் செய்தேன் என்பது பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறாராம். ஷாரூக்கானுக்கு அடுத்த படியாக இந்திய அளவில் இந்த நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்த இரண்டாவது நடிகர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் விக்ரம்.

இதுவரை ஷாரூக்கான் தான் அந்த நிறுவனத்தில் பேட்டி கொடுத்த முதல் நடிகராம். அவரை அடுத்து விக்ரம்தான் பேட்டி கொடுத்திருக்கிறாராம். சினிமாதான் விக்ரமுக்கு பேஷன். அவரை போல அடுத்து விக்ரம் தன் மகனையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர், விஜயகாந்த் செய்யாததை விஜய் செஞ்சிருக்காரு.. ‘கோட்’ படத்தால் புகழ் மேல் புகழ்

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் திரைப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். எப்படியாவது தன் அப்பாவை போல் நாமும் இந்த சினிமாவில் ஒரு தனி இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு நடித்து வருகிறார் துருவ் விக்ரம்.

Next Story