சிம்புவை தொடர்ந்து நயன்தாராவையும் உஷார் பண்ண பெரிய நிறுவனம்!.. கோடிக்கணக்குல சம்பளம்னா சும்மாவா?..

Published On: April 15, 2025
| Posted By : Saranya M

நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் திரைப்படம் வெளியானது. அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், நயன்தாராவின் அடுத்த படம் எப்போது வரும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நெட்பிளிக்ஸில் டெஸ்ட் படத்தை பின்னுக்குத்தள்ளிவிட்டு ராஷ்மிகா மந்தனா நடித்த சாவா திரைப்படம் மற்றும் நானியின் கோர்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் முன்னிலை வகித்துள்ளது.

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான மண்ணாங்கட்டி, ராக்காயி போன்ற படங்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை. கன்னடத்தில் யஷ் உடன் இணைந்து டாக்ஸிக் படத்திலும் மலையாளத்தில் நிவின் பாலி உடன் இணைந்து டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்.

சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பிலும் அடிக்கடி பிரச்சினை உருவாகி வருவதாகவும் அந்த படத்தில் நயன்தாரா தொடர்வாரா மாட்டாரா என்கிற சந்தேகங்களையும் சினிமா வட்டாரங்கள் கிளப்பி வருகின்றன.

இந்நிலையில், நடிகர் சிம்பு சமீபத்தில் காசா கிராண்ட் விளம்பரத்தில் நடித்த நிலையில், தற்போது அவரை பின்தொடர்ந்து நடிகை நயன்தாராவும் காசா கிராண்ட் விளம்பரத்தில் நடித்துள்ளார். சிம்பு மற்றும் நயன்தாராவை தங்கள் விளம்பரப் படத்தில் பல கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து காசா கிராண்ட் நிறுவனம் நடிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் இணைந்து நடிக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாத நிலையில், நடிகை நயன்தாரா விளம்பரப் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.