சிவாஜிக்கு அப்புறம் அந்த விஷயத்தில் விஜய் தான் டாப்!.. புகழ்ந்து தள்ளும் பிரபல இயக்குனர்!..
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள சூழ்நிலையில் அனைவரின் பார்வையும் விஜயின் மீதே திரும்பியிருக்கிறது. தற்போது லியோ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள விஜய் அங்கு படப்பிடிப்பை முடித்து மீண்டும் சென்னையில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
அவருடைய மார்கெட்டே இப்போது வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார் விஜய். ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்தப் படத்திற்கான வியாபாரமும் கட கடவென முடிந்து விடுகிறது.
அந்த அளவுக்கு அவரின் மீது நம்பிக்கை வைத்து விநியோகஸ்தரர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் விஜயை பற்றி நடிகரும் பிரபல இயக்குனருமான சேரன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். சேரனின் நடிப்பில் வெளிவந்த படம் ‘ ஆட்டோகிராப்’.
முதலில் இந்த படத்திற்கான கதையை விஜயிடம் தான் சொல்லியிருக்கிறாராம் சேரன். விஜய்க்கும் கதை பிடித்துப் போக நடிக்க சம்மதித்திருக்கிறார். அதே வேளையில் சேரன் ‘தவமாய் தவமிருந்து’ படத்தில் பிஸியாக இருந்திருக்கிறார். அந்தப் படம் முடிய தாமதம் ஆகியிருக்கிறது.
இந்தப் பக்கம் விஜயின் கால்ஷீட் வர சேரன் விஜயிடம் தவமாய் தவமிருந்து படம் தாமதம் ஆனதை சொல்லியிருக்கிறார். அந்தச் சம்பவம் தான் விஜயின் வாய்ப்பை சேரன் தவறவிட்டதன் காரணம். இதில் ஆட்டோகிராப் படத்தின் கதையை சொல்லும் போது,
இதையும் படிங்க : விஜயின் கணக்கே வேற!.. இந்த நேரத்துல கண்டிப்பா அரசியலுக்கு வந்துருவாரு!.. சொல்கிறார் மூத்த பத்திரிக்கையாளர்..
விஜய் அமைதியாக கேட்டாராம். அது 3 மணி நேரம் ஆனாலும் மிகவும் பொறுமையுடன் கேட்பாராம். இடையில் எழுந்து போவது என்று இந்த மாதிரியான செய்கையில் ஈடுபடமாட்டாராம். இதை குறிப்பிட்டு சொன்ன சேரன் இந்த விஷயத்தில் சிவாஜிக்கு அப்புறம் கதை கேட்பதில் விஜய் தான் பெஸ்ட் என்று கூறினார்.