‘டிடி ரிட்டர்ன்ஸி’ன் வெற்றி! சந்தானத்தால் ஆர்யாவுக்கு வந்த சிக்கல்.. எதிர்பார்த்ததுதான்

Published on: August 1, 2023
san
---Advertisement---

தன்னுடைய அசால்ட்டான நகைச்சுவை மூலம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் நடிகர் சந்தானம். நகைச்சுவைக்கு என்று அந்தக் காலத்தில் இருந்து வடிவேலு விவேக் வரை ஒரு தனியான ரூல்ஸ் வைத்திருப்பார்கள். சமூகப் பிரச்சினைகளை நகைச்சுவை மூலமாக எப்படி சொல்லலாம், மக்களுக்கு எளிதாக விளங்கக்கூடிய வகையில் பல நல்ல கருத்துக்களை நகைச்சுவை மூலம் எப்படி கொடுக்கலாம் என காலம் காலமாக அதற்கென்று ஒரு தனி வரைமுறை இருந்தது.

san1
san1

அதை எல்லாம் முழுவதுமாக மாற்றியவர் நடிகர் சந்தானம். போற போக்குல தட்டி விடுறது என்ற வாக்கியம் உண்டு. அதை அப்படியே நகைச்சுவையில் தெளித்தவர் சந்தானம். அந்த இடத்தில் என்ன வருகிறதோ அதை அப்படியே தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக கொண்டு வந்தார் சந்தானம்.

விஜய் டிவியில் ஆரம்பித்த தனது பயணத்தை இன்று வெள்ளி திரை வரைக்கும் காப்பாற்றிக் கொண்டு வருகிறார். திடீரென ஹீரோ அவதாரம் எடுத்து நடித்தால் இனிமேல் ஹீரோவாக தான் நடிப்பேன் என பல படங்களில் ஹீரோவாக நடித்தார் சந்தானம். அதில் ஒரு சில படங்கள் மட்டுமே கிளிக் ஆனது. பெரும்பாலான படங்கள் வெறும் தோல்வியையே தழுவியது.

san2
san2

எப்படியாவது ஒரு ஹிட்டை கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த சந்தானத்திற்கு டிடி ரிட்டன்ஸ் என்ற பட வாய்ப்பு வர அதில் நடித்து சமீபத்தில் தான் அந்த படம் வெளியானது. படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. படமும் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க : இதுவரை நடிக்காத கேரக்டர்! ‘கேப்டன் மில்லர்’ ட்ரெய்லரே இன்னும் ஒய்ந்தபாடில்லை – தனுஷ் கொடுத்த ஷாக்

இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தின் வெற்றியால் சந்தானத்திற்கு மீண்டும் மவுசு அதிகமாகிவிட்டது. ஏற்கனவே அவரை வைத்து படம் எடுக்க நினைத்தவர்கள், படம் எடுத்தவர்கள் என இந்த சூட்டோடு சூடாக சந்தானத்தை வைத்து சீக்கிரம் படத்தை எடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்களாம்.

சமீபத்தில் தான் ஆர்யாவும் சந்தானமும் நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் முயற்சியில் படக்குழு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. டி டி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றியால் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என இயக்குனரும் தயாரிப்பாளரும் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்களாம்.

san3
san3

இதன் மூலம் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யாவை விட சந்தானத்திற்கு ஒரு வேளை அதிக கவனம் செலுத்துவார்களோ என கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.ஏனெனில் ஆர்யாவின் நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது. அவர் நடித்த சமீப கால படங்கள் எதுவும் வெற்றியடையவில்லை. ஆனால் சந்தானத்திற்கு இந்த படம் ஒரு வெற்றியை தந்து இருப்பதால் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் எப்படி இரண்டு பேருக்கும் சமமான காட்சிகளை கொடுக்கப் போகிறார்கள் என கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க : ஒரு படம் ஹிட்டுன்னா இப்படியா?… தாறுமாறா சம்பளத்தை ஏத்திய சந்தானம்!.. ஷாக்கில் திரையுலகம்..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.