கோடி என்ன கொடியிலயா தொங்குது! அள்ளி அள்ளி கொடுக்கிறாங்க - தாறுமாறா உயர்ந்த நெல்சன் சம்பளம்

by Rohini |   ( Updated:2023-08-30 06:51:49  )
nelsaon
X

nelsaon

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை கொடுத்ததன் மூலம் தமிjழ் திரையுலகில் ஒரு முக்கியமான இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் இயக்குனர் நெல்சன். முதல் இரண்டு படங்கள் தாறு மாறு வெற்றியடைந்ததனால் விஜயை இயக்கும் பொறுப்பு நெல்சனுக்கு வந்தது.

ஆனால் அந்தப் படம் வசூல் ரீதியில் அதிக வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியில் பின்னடைவையே சந்தித்தது. படம் விமர்சனத்திற்கு ஆளானதோ இல்லையோ நெல்சன் படு பயங்கரமாக விமர்சிக்கப்பட்டார். எங்கு பார்த்தாலும் அவரை ட்ரோல் செய்யாத ரசிகர்களே இல்லை.

இதையும் படிங்க : பிரபல அரசியல் தலைவரின் பயோபிக்கில் நடிக்க இருக்கும் சரத்குமார்! ரெண்டு பேருக்குமே செட் ஆகாதே – எப்படி?

பல மீம்ஸ்களை போட்டு வெளியே வராத அளவுக்கு சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வந்தனர். இருந்தாலும் தளராத மனம் கொண்ட நெல்சன் ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார். முதலில் ரஜினி தயங்கியதாகவும் அதன்பின் தான் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

ஜெய்லர் படம் எதிர்பாராத அளவில் மாபெரும் வெற்றியடைந்தது. இன்று வரை கோடிக்கணக்கில் வசூலை அள்ளி வருகின்றது. நெல்சனை தூக்கி கீழே போட்டு மிதித்தவர்கள் எல்லாம் இன்று அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

ஜெய்லர் திரைப்படத்திற்காக நெல்சனுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 18 கோடியாம். ஆனால் ஜெய்லர் வெற்றிக்கு பிறகு பல தயாரிப்பாளர்கள் நெல்சனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்களாம். இவரை வைத்து மீண்டும் படம் பண்ண வேண்டும் என்ற ஆசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நெல்சனுக்கு 55 கோடி சம்பளம் கொடுத்து தன் கைவசம் வைத்திருக்கிறதாம்.

இதையும் படிங்க : ‘ஜெய்லர்’ வசூலை முறியடிக்க பலே திட்டம்! ஒரு மாசத்துக்கு முன்பே பட்டரையை போட்ட‘லியோ’ குழு – இது ஓவர்தான்

இதன் மூலம் நெல்சனின் அடுத்தப் படமும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தோடு தான் என்று தெரிந்து விட்டது. கோடிக் கணக்கில் சம்பளத்தை கொடுத்து நெல்சனை ஒய்யாரத்தில் உட்கார வைத்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

Next Story