More
Categories: Cinema News latest news

பண்ணது தப்புதான்!.. ப்ளிஸ் யாராவது எனக்கு உதவி பண்ணுங்க!.. கூல் சுரேஷ் நிலமைய பாருங்க!..

Cool Suresh: சமீபத்தில் மன்சூர் அலிகான் தயாரித்து அவர் நடிப்பில் உருவான சரக்கு படத்தின் ஒரு விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு பாக்யராஜ் முதல் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். கே.ராஜன் உட்பட அனைவரையும் கலாய்த்து தள்ளினார் மன்சூர் அலிகான்.

அந்த மேடையே அவரால் கலகலப்பானது. அப்போது வழக்கம் போல எல்லா பட விழாக்களிலும் கலந்து கொண்டு ஏதாவது ஒரு பொருளை வைத்து அந்தப் படத்தை பற்றி ப்ரோமோட் செய்வது கூல் சுரேஷின் பழக்கம்.

Advertising
Advertising

இதையும் படிங்க: மோஷன் போற இடத்துல என்ன ஃபேஷன்!.. என்ன சிம்ரன் இதெல்லாம்!.. பிக் பாஸ் பிரபலத்தை கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்!..

அதைப் போல இந்த சரக்கு திரைப்படத்தையும் ப்ரோமோட் செய்ய கையில் பாட்டிலுடனேயே வந்திருந்தார். அப்போது கழுத்தில் ஒரு மாலையுடனும் கையில் ஒரு மாலையுடனும் மேடைக்கு பேச வந்த போது எல்லாருக்கும் மரியாதை செலுத்துகிறீர்களே? பல மணி நேரமாக பேசிக் கொண்டிருக்கும் இந்த பெண் மீது யாருக்காவது மாலை போட தோணுச்சா ? என்று பக்கத்தில் இருந்த தொகுப்பாளினி மீது வைத்திருந்த மாலையை போட்டு விட்டார்.

இதனால் அந்த தொகுப்பாளினி மிகவும் டென்சன் ஆனார். மேலும் விழாவில் இருந்த பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மன்சூர் அலிகானும் மன்னிப்பு கேட்டார். கூல் சுரேஷும் தெரியாமல் செய்து விட்டேன் என்றும் அந்த மேடையிலேயே மன்னிப்பு கேட்டார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு கொடுக்கத் தெரிஞ்ச பாதுகாப்பை விஜய்க்கு ஏன் கொடுக்க முடியல? தம்பி வருவான் – தோள்கொடுத்த சீமான்

ஆனால் அதன் பிறகு கூல் சுரேஷின் நிலைமையே மாறிவிட்டது. இந்த சம்பவம் நடந்ததில் இருந்து சமூக வலைதளங்களில் கூல் சுரேஷ் திட்டி பல சேனல்கள், ரசிகர்கள் என தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கூல் சுரேஷ் இன்று திடீரென தான் பேசிய ஒரு வீடியோவை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். அதாவது நான் ஒரு சில பேரின் கல்விக்கு உதவியிருக்கிறேன். இப்பொழுது அவன் எல்லாம் வந்து அறிவுரை செய்கிறான். அவரவருக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றது. அதை எல்லாம் விட்டுவிட்டு எனக்கு வந்து அறிவுரை சொல்கிறார்கள். இருந்தாலும் நான் பண்ணியது தவறுதான் என்று கூறிவிட்டு,

இதையும் படிங்க: வடிவேல வச்சி படமெடுத்து என் சோலியே முடிஞ்சு போச்சி!.. புலம்பி தள்ளும் இயக்குனர்…

நான் ஒன்னும் பெரிய பங்களா, கார் வைத்து வாழவில்லை. நடுத்தர குடும்பத்தில் தான் வசிக்கிறேன். இப்பொழுது நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். அதனால் யாராவது வந்து எனக்கு உதவி செய்யுங்கள். மன்சூர் அலிகான் அண்ணா! நீங்களும் எனக்கு உதவி செய்யுங்கள். என்னுடய நம்பர் தெரிஞ்சவர்கள் கூகுள் பே, போன் பே எதாவதுசெய்து என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் என்று அந்த வீடியோவில் பேசி பதிவிட்டிருக்கிறார்.

Published by
Rohini