More
Categories: Cinema News latest news

லேடிஸ் மேட்டரால் அஜித்தை விடாமல் துரத்தும் மக்கள்! இயக்குனர் பார்த்த வேலை.. எங்க வந்து நிக்குது பாருங்க

Actor Ajith: இன்று கோலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து மிக உயரத்தில் இருப்பவர் நடிகர் அஜித். ஆரம்பத்தில் இவருடன் நடித்த சக நடிகர்கள் நடிகைகள் அஜித் இந்த அளவுக்கு ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பார் என நாங்கள் நினைத்ததே இல்லை என்று கூறியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஆரம்பகட்ட காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்திருக்கிறார் அஜித் .

பொதுவாக இவருக்கு சரியாக தமிழ் பேச வராது. எழுதவும் தெரியாது. அதனாலயே சொந்த குரலில் பேச வைப்பதற்கு பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தயங்கி இருக்கிறார்கள். ஆனால் நான் சொந்த குரலில் தான் பேசுவேன் என சில சமயங்களில் அடம்பிடித்து இருக்கிறார் அஜித். இப்படி பல போராட்டங்களைக் கடந்து இன்று தமிழ் மக்களின் நெஞ்சங்களில் குடிபெயர்ந்திருக்கிறார் அஜித்.

இதையும் படிங்க: தனுஷ் வீட்டுக்கு அடிக்கடி சரக்கு அடிக்கப் போகும் பிரபலம்! தகாத வார்த்தையில் பேசிய செல்வராகவன்

நடிகர்களிலேயே அஜித்துக்கு தான் அதிகமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர் .அந்த வகையில் எங்கு பார்த்தாலும் தல தல என தலையில் வைத்து இவரை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். இந்த நிலையில் அஜித் நடித்த திருப்பதி படத்தை பற்றி அந்த படத்தின் இயக்குனரான பேரரசு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். விஜய்க்கு ஆரம்பத்திலிருந்து ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம் .

ஆனால் அஜித்தை பொறுத்த வரைக்கும் இளைஞர்கள் ஆண் ரசிகர்கள் இவர்கள்தான் அதிகமாக தியேட்டர்களில் படம் பார்க்க வருவார்கள். அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அஜித்தின் படத்திற்கு பெண்களும் வரவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். உடனே பேரரசு எப்படியாவது இவர் படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக ரசிகர்களையும் பெண்களையும் வரவழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் லேடிஸ் மேட்டரை அஜித் நடிக்கிற படத்தில் வைத்தால் கண்டிப்பாக குடும்பமாக வந்து பார்ப்பார்கள் என நினைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: உலக நாயகனுக்கே பயமா…? தன்னைத் தக்க வைக்கப் போராடும் கமல்…! வேறு கோணத்தில் சிந்தித்த பிரபலம்..!

அதன் காரணமாகத்தான் திருப்பதி படத்தில் பிரசவத்தை அடிப்படையாக வைத்து ஒரு காட்சியை எடுத்திருக்கிறார் பேரரசு. அதிலிருந்து எங்கு பார்த்தாலும் இலவச பிரசவம் என்ற ஒரு புதிய செயல் என்று நடைபெற்றுக் கொண்டு வருகின்றன .இந்த படத்திற்கு பிறகு அஜித்தின் படத்தை பார்க்க பெண் ரசிகைகளும் கூட்டமாக வந்து படத்தை பார்த்தனர் .அது மட்டும் அல்லாமல் சிவகாசி திருப்பதி போன்ற படங்கள் எல்லாம் ஆக்சன் படங்களாக அமைந்திருக்கும் .ஆனால் அஜித்தின் இந்த திருப்பதி படம் சமூக அக்கறை கொண்ட கருத்தை உள்ளடக்கிய படமாக வெளிவந்திருக்கும் என பேரரசு கூறியிருக்கிறார்.

Published by
Rohini

Recent Posts