இசைஞானி - ரஜினி கூட்டணி ஏன் மீண்டும் சேரல தெரியுமா?-வாய்க்கால் தகராறை விட பெருசா இருக்கும் போலயே!..

ilai
90 களுக்குப் பிறகு ரஜினியின் படங்களுக்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது அவர் படங்களில் அமைந்த இசை தான். ஏ ஆர் ரகுமான்,தேவா, இப்போது அனிருத் இவர்களின் இசையில் ரஜினியை மிகவும் மாஸாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆரம்ப காலங்களில் ரஜினியின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. இருவரின் கூட்டணியில் எக்கச்சக்க பல நல்ல பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. இருவரும் சேர்ந்து பணியாற்றிய கடைசி திரைப்படம் வீரா.
வீரா திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் இளையராஜாவும் சேர்ந்து பணியாற்றவே இல்லை. அப்படி இருவரும் அந்த அளவுக்கு நெருக்கமான நண்பர்களாகவே இருந்து வந்தனர்.
அதற்கான காரணத்தை கங்கை அமரன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ரஜினிக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் பாட்ஷா. அந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் தென்னிசை தென்றல் தேவா.
ஆனால் முதலில் பாட்ஷா படத்திற்கு இசையமைக்க இருந்தது இளையராஜா தானாம். ஆனால் தேவையில்லாமல் வாயை விட்டு அந்தப் பட வாய்ப்பு தவறவிட்டிருக்கிறார் இளையராஜா.
ரஜினியிடம் இளையராஜா "உனக்கு தேவையான பணத்தை நீ வாங்கிக்கிட்ட. நான் எனக்கு தேவையான பணத்தை கேட்கிறேன். தந்தால் தரட்டும். இல்லையென்றால் இந்த படமே வேண்டாம்"என சொன்னாராம்.
அவர் நினைத்ததைப் போலவே தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து இளையராஜா கேட்ட பணத்தை தர முடியவில்லை. அதனால் தேவாவை கமிட் செய்து பாட்ஷா படத்திற்கு ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். ஆனால் அந்த பாட்ஷா படத்தில் ரஜினிக்கு உரிய பிஜிஎம் தான் தற்போது ரிலீசாகும் ரஜினியின் படங்களுக்கு ஒரு மாசான அறிமுகமாக இருந்து வருகின்றன.