‘விண்ணைத்தாண்டி வருவாயா’வுக்கு பிறகு அந்த ஒரு மேஜிக்.. தக் லைஃப் குறித்து திரிஷா சொன்ன தகவல்

by Rohini |   ( Updated:2025-04-18 00:40:51  )
simbu
X

simbu

Thug LIfe: கமல் , சிம்பு கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் படம் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு கமலும் மணிரத்னமும் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். நாயகன் திரைப்படம் ஒரு கல்ட் கிளாசிக் படமாக அமைந்தது. இளையராஜா இசையும் அந்தப் படத்திற்கு பெரிய அளவில் புகழை பெற்றுத்தந்தது.

அந்தப் படத்திற்கு பிறகு மீண்டும் இவர்கள் தக் லைஃப் மூலம் இணைந்திருப்பது எப்படிப்பட்ட ஒரு மேஜிக்கை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஆனால் நாயகன் மாதிரி இல்லாமல் வேற ஜானரில் படம் இருக்கும் என ஏஆர் ரஹ்மான் தெரிவித்திருக்கிறார். இன்று சென்னையில் பல ஊர்களில் இருந்தும் பத்திரிக்கையாளர்கள் வரவழைக்கப்பட்ட பிரஸ் மீட்டை படக்குழு நடத்தியிருக்கிறார்கள்.

கமல், மணிரத்னம் ,திரிஷா, சிம்பு, அசோக் செல்வன், அபிராமி, ஏஆர் ரஹ்மான் என அனைவரும் கலந்து கொண்டு அவரவர் அனுபவங்களை தெரிவித்தார்கள். அதில் திரிஷா பேசும் போது இத்தனை லெஜெண்ட்ஸ் இருக்கும் மேடையில் நான் இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் 22 வருடத்திற்கு முன்பு நானும் அபிராமியும் நல்ல தோழிகளாக இருந்தோம். இந்த படத்தில் அவருடன் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் கூறியிருந்தார்.

மேலும் சிம்புவை பற்றி கூறும் போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு நீங்களும் சிம்புவும் எப்போது மீண்டும் இணைந்து படம் பண்ணப் போகிறீர்கள் என்று அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தனர். எப்போது அது நடக்கும் என திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தனர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு அந்த ஒரு மேஜிக் இந்தப் படத்தில் நடந்திருக்கிறது என திரிஷா கூறினார்.

தக் லைஃப் படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா கூடிய சீக்கிரம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று படத்தின் முதல் சிங்கிள் வெளியாக இருக்கிறது. அந்த பாடலை கமலே எழுதியிருக்கிறார்.

Next Story