நள்ளிரவில் கமலின் கதவை தட்டிய ரஜினி.. இப்படி இருக்கிறதுனாலதான் சூப்பர் ஸ்டார்

by Rohini |   ( Updated:2025-05-07 03:14:07  )
rajini_kamal
X

rajini_kamal

Rajini Kamal: சினிமாவில் இருக்கும் போட்டி நடிகர்கள் நண்பர்களாக இருப்பது என்பது அவ்வளவு லேசான ஒரு விஷயம் கிடையாது. அந்த வகையில் தனது ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள் ரஜினி மற்றும் கமல். அதே நேரம் இருவரும் போட்டி நடிகர்களாகவும் இருந்து வருகிறார்கள். இப்போது எப்படி விஜய் அஜித் படங்கள் போட்டி போட்டு வெளியாகின்றதோ அதேபோல ஆரம்ப காலங்களில் இருந்து இவருடைய படங்கள் தான் ஒருவருக்கொருவர் போட்டியாக இருந்திருக்கின்றன .அப்படி இருக்கும் பொழுது இந்த அளவு ஒரு நெருக்கமான நட்பு எப்படி இவர்களுக்குள் உருவானது என்பதுதான் அனைவரின் கேள்வியாகவும் இருக்கிறது.

அதை ஆச்சரியமாகவும் பார்க்கிறார்கள். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருந்தது பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடை. அப்போது மேடையில் ரஜினியும் கமலும் பேசும் பொழுது மாறி மாறி இருவரும் தனது அன்பை பரிமாறிக் கொண்டது அனைவருக்கும் வியப்பாக இருந்தது. கமலின் படங்களை ஆர்வத்துடன் பார்த்து ரசித்திருப்பதாகவும் ரஜினி கூறினார். அதேநேரம் தனக்கு நடிப்பில் ஏதாவது சந்தேகம் என்றாலும் முதலில் கமலுக்கு தான் போன் செய்வேன் என்றும் ரஜினி அவ்வளவு பெரிய மேடையில் கூறி இருப்பது சாதாரண விஷயம் கிடையாது.

இன்று இந்தியாவில் சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்த நிற்பவர் ரஜினி, இப்படி ஒரு அந்தஸ்தை உடையவர் சாதாரணமாக இந்த விஷயத்தை சொல்லி விட்டாரே என்பதுதான் அனைவருமே ஆச்சரியமாக பார்க்கிறார்கள் .இந்த நிலையில் அவருடைய இன்னொரு பேட்டியும் இப்போது வைரலாகி வருகின்றது. கமல் நடித்த படங்களில் ரஜினிக்கு பிடித்த முதல் திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். அந்த படம் ரிலீஸ் ஆனபோது ஒரு தியேட்டரில் இரவு 11 மணி காட்சி ரஜினிக்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அதை ரஜினியும் அவருடைய மனைவியும் பார்த்துவிட்டு திரும்பும் போது நள்ளிரவு 2 மணி. படம் பார்த்த பிறகு கமலை உடனடியாக பார்க்க வேண்டும் என ரஜினி லதாவிடம் கூறியிருக்கிறார். அதற்கு லதா ரஜினிகாந்த் இப்போது எப்படி முடியும்? இரவு 2 மணி ஆகிவிட்டது. அவர் தூங்கிக் கொண்டிருப்பார் என சொல்லி இருக்கிறார் .ஆனாலும் ரஜினி இப்பொழுதே அவரை நான் பார்க்க வேண்டும் என நேராக கமல் வீட்டுக்கு சென்று அவர் கதவைத் தட்டி தூங்கியவரை எழுப்பி கமலின் கையைப் பிடித்து படத்தை பார்த்த சந்தோஷத்தில் கண்கலங்கி பேசினாராம் ரஜினி.

#image_title

டெக்னாலஜி வளராத காலத்திலும் இப்படி அவர் அந்த மாதிரி கேரக்டரில் நடித்தது மிகவும் ஆச்சரியம். அது அவரால் மட்டும் தான் முடியும் .அதைப்போல அவருடைய ஹேராம் திரைப்படத்தை 30 அல்லது 40 முறை ரஜினி பார்த்தாராம். தேவர்மகன் திரைப்படம் காவியம் என கமலின் படங்களை வரிசைப்படுத்தி அந்த மேடையில் கூறியிருக்கிறார் ரஜினி. அதுமட்டுமல்ல அபூர்வ சகோதரர்கள் படத்தை பற்றி குறிப்பிடும் பொழுது ‘ நீங்கள் என்னை விட வயதில் சிறியவர். இல்லை என்றால் காலில் விழுந்திருப்பேன்’ என்றும் கமலிடம் கூறினாராம் ரஜினி.

Next Story