சினேகா ரோலில் முதலில் செலக்ட் ஆனவர் நயன்! படத்தை பார்த்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா?

Nayanthara: கோட் திரைப்படத்தில் சினேகா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா என ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு கூறியது சமூக வலைதளங்களில் வைரலானது. அதுமட்டுமல்லாமல் கோட் படத்தில் முதலில் யாரெல்லாம் நடிக்க இருந்தார்கள்? அதன்பிறகு ஏன் இந்த மாற்றம் என்பதை பற்றி அந்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார் வெங்கட் பிரபு.

மோகனுக்கு பதில் அரவிந்த் சாமியை நடிக்க வைக்கத்தான் பிளான் பண்ணி இருந்ததாகவும் கூறியிருந்தார் வெங்கட் பிரபு. அதுமட்டுமல்லாமல் மாதவனையும் இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தாராம். ஆனால் சில பல மாற்றங்களுக்குப் பிறகு கடைசியில் படத்தில் பார்த்த அந்த கேரக்டர்கள் தான் செட் ஆகியது .

இதையும் படிங்க:சினேகா கேரக்டரில் முதல் தேர்வு இந்த நடிகைதான்… கடைசியில் அந்த பிரபலம் சொன்னது என்ன தெரியுமா?

இந்த நிலையில் கோட் படத்தை பார்த்த நயன்தாரா வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து கோட் படத்தை பற்றி பகிர்ந்து கொண்ட செய்தியை வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். கோட் திரைப்படம் வெளியாகி மூன்றாவது நாளில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா பெங்களூரில் உள்ள ஒரு தியேட்டரில் பார்க்க சென்றார்.

பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவுக்கு போன் செய்த நயன்தாரா சினேகாவின் கதாபாத்திரத்திற்கு அவரை விட வேற எந்த சாய்ஸும் தேவைப்படாது. அந்த அளவுக்கு சினேகா நல்லா பண்ணி இருக்காங்க. நீங்க நல்ல விஷயத்தை தான் செய்திருக்கிறீர்கள்.

இதையும் படிங்க:புரமோஷனுக்கு வரலைனா எங்க பொழப்பு என்னாகுறது? அஜித்தால் இப்படி ஒரு முடிவா?

சினேகாவிடமும் இதை சொல்லுங்கள் என நயன்தாரா கூறினாராம். இது நயனின் பெருந்தன்மை என வெங்கட் பிரபு அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். அந்த அளவுக்கு கோட் திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே சினேகா தோன்றியிருந்தாலும் ஒரு யதார்த்தமான குடும்ப தலைவியாக படும் வேதனையை தன்னுடைய நடிப்பின் மூலம் அழகாக வெளிப்படுத்தி இருப்பார் சினேகா.

தன் கணவர் எந்த விதத்திலும் கெட்டுப்போக கூடாது என்பதிலும் ஒரு மனைவி எப்படியான போராட்டத்தை எதிர்கொள்வாள் என்பதையும் தன்னுடைய நடிப்பின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார் சினேகா. இதற்கு முன் விஜயுடன் ஒரே ஒரு படத்தில் மட்டுமே சேர்ந்து நடித்த சினேகா அதன்பிறகு கோட் திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்திய சினிமாவிலேயே மிகச்சிறந்த நடிகை! ‘சூர்யா 44’ல் களமிறங்க ரெடியாகிட்டாங்க

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it