எல்லாரும் சிரிச்ச படம்!.. ஆனா சீரியஸா பார்த்த கமல்!.. மிர்ச்சி சிவா பகிர்ந்து சுவாரஸ்ய தகவல்!...
தமிழ் சினிமாவில் ஒரு என்சைக்ளோபீடியாக இருப்பவர் நடிகரும் உலகநாயகனுமான கமல்ஹாசன். சினிமாவின் அத்தனை நுணுக்கங்களையும் தன் சுண்டு விரலில் வைத்திருக்கும் ஒரு உன்னதமான நடிகர். நடிகராக இவரை பார்த்து மெய்சிலிர்த்தவர்கள் சினிமாவில் ஏராளம்.
சிவாஜிக்கு அடுத்தப் படியாக கமலை வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவே பார்த்து வியக்கத்தக்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்போது கமலின் நடிப்பில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் படத்தை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் கமல். பயங்கர பிஸியான நடிகராகவே வலம் வருகிறார். இந்த நிலையில் கமலை பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலை நடிகர் மிர்ச்சி சிவா ஒரு பேட்டியின் போது பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.
அதாவது மிர்ச்சி சிவா முதன் முதலில் அறிமுகமாகி நடித்த படம் சென்னை 28. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு காமெடி கலந்த காதல் படமாக அமைந்தது. படம் முழுக்க நகைச்சுவை காட்சிகளை சொட்ட விட்டிருப்பார் பிரேம்ஜி.
படம் வெளியாகி இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் சென்னை 28. இந்தப் படத்தை பார்க்க கமல் வந்தாராம். அதை அறிந்த மிர்ச்சி சிவா ஒரு ஓரமாக கமல் எப்படி ரசிக்கிறார் என்று மறைந்திருந்து பார்த்தாராம். பார்த்த அனைவரும் சிரிக்கிறார்களாம். ஆனால் கமல் மட்டும் ஒரு காட்சியில் கூட சிரிக்க வில்லையாம்.
சரி எதார்த்தமாக பாத்தால் கூட கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால் படத்தை மிகவும் சீரியஸாக பார்த்தாராம். இதை பார்த்துக் கொண்டிருந்த மிர்ச்சி சிவா மனதில் போச்சு அவ்ளோதான் என்று நினைத்துக் கொண்டிருந்த சிவாவை வெளியில் வந்து கமல் கைகொடுத்து நைஸ் என்று சொல்லியிருக்கிறார்.
மேலும் கமல் சொன்னது தான் ஹைலைட்டு. ‘ நான் கிரிக்கெட்ட ஃபாலோ பண்றது இல்ல, கராத்தே,குங்க்ஃபூ என மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளை தான் ஃபாலோ பண்ணுவேன்’ என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம். அதன் பிறகு தான் ஏன் சீரியஸாக பார்த்தார் என்று புரிந்தது என மிர்ச்சி சிவா கூறினார்.