ராதிகா நடிப்பில் அடுத்து ரிலீஸாக இருக்கும் திரைப்படம் தாய்கிழவி. ஒரு வித்தியாசமான கேரக்டரில் ராதிகா அந்தப் படத்தில் நடித்துள்ளார். வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் ஒரு அடாவடி பாட்டியாக ராதிகா நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர், போஸ்டர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இளவரசி என்றால் அது ராதிகாதான்.
கிட்டத்தட்ட சாவித்ரிக்கு அடுத்தபடியான நிலையில் நடிப்பில் போற்றப்படும் நடிகையாக ராதிகா திகழ்கிறார். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் கோலோச்சி வருகிறார் ராதிகா. கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான ராதிகா மேக்கப்பிற்காக உட்கார்ந்த போது அதற்குள் அவருடைய அப்பாவும் நடிகருமான எம்.ஆர்.ராதா அங்கு வந்துவிட்டாராம்.
இரு. முதன் முதலில் நான் பொட்டு வைத்து ஆரம்பிக்கிறேன். என்னை மாதிரியே நீயும் வரணும்னு சொல்லி பொட்டு வைத்தாராம் எம்.ஆர்.ராதா. அவருடைய ஆசிர்வாதம் எப்பவும் எனக்கு இருக்கிறது என ஒரு பேட்டியில் ராதிகா கூறியிருக்கிறார். இந்த நிலையில் தாய்கிழவி படத்தை பற்றியும் ராதிகா பேசியிருக்கிறார். அதாவது தாய்கிழவி மேக்கப் போட்டோ எடுத்து கமலுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
அதை பார்த்ததும் கமல் த்ரில் ஆகிவிட்டாராம். வேறு எந்த ஹீரோயினும் இதை பண்ணுனதே இல்லை என்று சொல்லி, ஆனா நீ இதை செய்திட்டே சூப்பர்னு சொல்லியிருக்கிறார் கமல். அப்போது ராதிகா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்திருக்கிறார். அப்போதுதான் தாய்கிழவி படத்தின் டிரெய்லரையும் கமல் பார்த்து இந்த மாதிரி ஒரு நடிகை இனிமேல் பிறந்துதான் வரணும் என சொல்லியிருக்கிறார் கமல்.
அதுமட்டுமில்ல she is best னும் சொல்லியிருக்கிறார். அவ்வளவு உடல் நிலையிலும் ராதிகாவுக்கு வானத்தில் பறந்த மாதிரி இருந்ததாக ஒரு பேட்டியில் ராதிகா சொல்லியிருக்கிறார்.
