எத்தனை பேருங்க வாலி படத்துக்கு சொந்தம் கொண்டாடுவீங்க.. சிம்ரன் பண்ண வேண்டியது என் ரோல்.. ஷாக் கொடுத்த நடிகை..!

Vaali: நடிகர் அஜித்குமார் நடிப்பில் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது வாலி திரைப்படம். இப்படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருந்த நிலையில் அந்த ரோல் தனக்கு தான் வந்ததாக தற்போது நடிகை ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவான படம் வாலி. இப்படத்தில் சிம்ரன், ஜோதிகா என இரண்டு நாயகிகள் நடித்திருந்தனர். தேவா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். ஆசை படப்பிடிப்பில் வசந்துக்கு உதவி இயக்குனராக சூர்யா இருந்த போது அவரிடம் கேட்டு அஜித் ஓகே செய்தாராம்.
இதையும் படிங்க: இதனால் தான் சிம்பு மீண்டும் ப்ரேக்கில் இருக்கார்.. மன்மதன் படத்தினை தொடர்ந்து STR48ல் நடக்க இருக்கும் விஷயம்…!
அதை தொடர்ந்து வாலி படத்தின் ஸ்கிரிப்ட்டை 60 நாளில் சூர்யா முடித்து கொடுத்தாராம். முதல்முறையாக அஜித் இரட்டை வேடம் ஏற்று இருந்தார். இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது கீர்த்தி ரெட்டி. இந்தியில் சில படங்களும், தமிழில் ஜாலி, தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் அவர் திடீரென விலகினார்.
இதை தொடர்ந்து படக்குழு மீனாவை அணுக அவரால் கால்ஷூட் கொடுக்க முடியவில்லை. பின்னர் தான் சிம்ரன் அந்த வேடத்தை ஏற்று இருந்தார். ஆனால் சமீபத்திய பேட்டியில் ஜோதிகா நான் தான் சிம்ரன் வேடத்தில் நடித்திருக்க வேண்டும். இந்தியில் நடித்ததால் அதை செய்ய முடியவில்லை. அதனால் தான் சின்ன கெஸ்ட் ரோல் செய்தேன் என்றார்.
இதையும் படிங்க: மோகனிடம் கேட்கக் கூடாத கேள்வியை கேட்டு வாங்கிக் கிட்ட இயக்குனர்! அவரிடம் இந்த கேள்வியை கேட்கலாமா?