Ajith:அடுத்த சம்பவம் உறுதி.. அஜித் மனசு வச்சா கண்டிப்பா நடக்கும்! ரெடியா இரு மாமே

by Rohini |   ( Updated:2025-04-11 22:42:58  )
ajith
X

ajith

Ajith; கடந்த 10 ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் உலகெங்கும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் படம் நல்ல ஒரு ரெஸ்பான்ஸை இதுவரை பெற்று வருகிறது. படத்தில் அஜித்துக்கு மனைவியாக திரிஷா நடித்திருக்கிறார். வில்லனாக அர்ஜூன் தாஸ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகிபாபு, பிரசன்னா, தெலுங்கு நடிகர் சுனில், ரெடின் கிங்ஸ்லி என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படமாக ரசிகர்களின் உற்சாக வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி முதல் நாள் கலெக்‌ஷனாக தமிழகத்தில் மட்டும் 31.9 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் நேற்று இரண்டாவது நாள் அந்த வசூல் பாதியாக குறைந்தது.

ஆனால் இனி வரும் நாள்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தில் வசூலில் ஏற்றத்தை காணலாம் என்றே தெரிகிறது. ஏனெனில் அந்தளவுக்கு படத்தை அஜித் ரசிகர்களே வெவ்வேறு தரப்பு ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டனர். அதுமட்டுமில்லாமல் படத்தில் ரெஃபரன்ஸ் என்ற அடிப்படையில் பல விஷயங்களை ஆதிக் செய்திருக்கிறார். அவ்வப்போது விஜயையும் நியாபகப்படுத்தும் விதமாக சில வசனங்களும் இருக்கின்றன.

அதனால் விஜய் ரசிகர்களும் சேர்ந்து இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதுவரை இல்லாத வகையில் இந்தப் படத்திற்காக அஜித்தை முற்றிலும் மாற்றியிருக்கிறார் ஆதிக் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு இறங்கி நடித்திருக்கிறார் அஜித். பில்லா, மங்காத்தா போன்ற படங்களுக்கு பிறகு அஜித் அந்த மாதிரி கதைகளை தேர்ந்தெடுக்கவே இல்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கேங்க்ஸ்டர் படமாக இந்தப் படத்தில்தான் நடித்திருக்கிறார் அஜித். அதனாலேயே ஒட்டுமொத்த ரசிகர்களும் படத்தை பார்த்து குதூகலித்து வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார் என்ற ஒரு கேள்வி எழுந்து வருகிறது . ஆனால் அந்த லிஸ்டில் சிறுத்தை சிவா, விஷ்ணு வர்தன், ஆதிக் ரவிச்சந்திரன் , தெலுங்கு இயக்குனர்கள் என வரிசை கட்டிக் கொண்டு நிற்கின்றனர். இந்த லிஸ்ட்டில் தனுஷும் உள்ளடக்கம்.

ஆனால் ரேஸை முடித்த பிறகுதான் அஜித் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் பரவும் செய்தி என்னவென்றால் மீண்டும் இதே கூட்டணிதான் அஜித்தின் 64 படத்தை கையில் எடுக்கப் போவதாக சொல்லப்படுகிறது. ஆதிக், அஜித், ஜிவி பிரகாஷ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இவர்கள்தான் மீண்டும் இணையப் போவதாகவும் படம் 2026 தீபாவளி ரிலீஸாக இருக்கும் என்றும் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Next Story