கண்ணா லட்டு தின்ன ஆசையா!....இவ்ளோ நடந்தும் மீண்டும் இணையும் நயன்தாரா - பிரபுதேவா...!
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா மக்களால் லேடி சூப்பர் ஸ்டாராக அறியப்படுகிறார். இவரது அபார வளர்ச்சியை கண்கூடாக பாக்க முடிகிறது. தமிழ், தெலுங்கு என மிகவும் பிஸியாகவே வலம் வருகிறார். கடந்த வாரம் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இவருக்கு அபார வெற்றியை தந்தது.
இந்த படத்திற்கு பிறகு காட்ஃபாதர், கனெக்ட் என சில படங்களில் நடித்து வருகிறார். அதுவும் தெலுங்கில் ஜெயம் மோகன் ராஜ் இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் படத்தில் நடிக்கிறார். இந்த படம் மலையாளத்தில் வெளியான லூசிமர் படத்தின் ரீ மேக் ஆகும். அந்த படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியார் நடித்திருப்பார்.
அதே கதாபாத்திரத்தில் தான் தெலுங்கில் நயன் நடிக்கிறார். விஷயம் என்னவெனில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவாவை கமிட் செய்துள்ளனராம் படக் குழுவினர். ஏற்கெனவே இருவருக்கும் இடையே அரங்கேறிய காதல் பற்றி யாவரும் அறிந்ததே. அது சில பல பிரச்சினைகளால் முற்றும் பெற்றது.
அப்படி இருக்க நீண்ட நாள்களுக்கு பிறகு நயன்தாராவும் பிரபுதேவாவும் இணையப் போகும் படமாக இருக்கும்.ஒரு துருவத்தில் இரு வேறு ஆடுகள் சந்திக்கும் நிகழ்வுதான் இந்த படத்திலும் அரங்கேற போகிறது. என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து தான் பாக்கனும். எங்க போனாலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சிக்கிக் கொண்கிறார் நயன்தாரா.