பட்டது போதும் பயந்து ஓடி வந்த சந்தானம்! பழைய பார்முக்கு திரும்பியும் கெத்த விட்டுக் கொடுக்காத சம்பவம்

by Rohini |
san
X

san

நகைச்சுவையில் வடிவேலு விவேக் இவர்களுக்கு பிறகு டாப்பில் வந்த நடிகர் சந்தானம். இவருடைய கொழ கொழ வாய்ஸினால் அனைவரையும் நக்கல் அடித்து நகைச்சுவை பண்ணுவதில் சிறந்தவராக விளங்கினார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து தன்னுடைய நகைச்சுவை திறமையை காட்டி வந்தார் சந்தானம்.

san1

san1

அதன் பிறகு நானும் ஒரு ஹீரோவாக நடித்தால் என்ன என்ற எண்ணத்தில் நகைச்சுவைக்கு முழுக்கு போட்டார். அவர் ஹீரோவாக நடித்து ஒரு சில படங்களே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் சமீப காலமாக அவர் நடித்து வெளியான எந்த படங்களும் நினைத்த அளவு வெற்றியை பதிவு செய்யவில்லை.

இதையும் படிங்க : ‘விடாமுயற்சி’க்கு குட்பை! புது முயற்சியை கையில் எடுத்திருக்கும் அஜித் – அட இதுகூட நல்லா இருக்கே

மேலும் ரசிகர்களும் அவரை நகைச்சுவை நடிகராகவே பார்க்க விரும்பினர். இதனால் தான் கொண்டிருந்த எண்ணத்தில் கொஞ்சம் கீழ் இறங்கி வந்திருக்கிறார் சந்தானம். பழையபடி மற்ற நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க தயார் என்று கூறியிருக்கிறார் சந்தானம் .அது மட்டுமில்லாமல் ஆர்யா சந்தானம் கூட்டணியில் வெளியான பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படத்தை மறுபடியும் எடுத்தால் கூட நான் நடிக்கத் தயார் என கூறியிருந்தார்.

san2

san2

அவர் அன்று ஒரு மேடையில் கூறியிருந்த இந்த விஷயம் இன்று நனவாக இருக்கிறது. அந்தப் படத்தை மீண்டும் எடுக்க முன் வந்திருக்கிறார்கள் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும். அதில் ஆர்யாவும் சந்தானமும் நடிக்கிறார்களாம்.

ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி முழு காமெடி நடிகராக சந்தானம் நடிக்க மாட்டாராம் .ஏனெனில் சில காலமாக அவர் ஹீரோவாகவே நடித்து விட்டதால் இந்த படத்தில் ஆர்யாவுக்கு நிகராக இன்னொரு ஹீரோவாக நடிக்கப் போகிறாராம் சந்தானம்.

Next Story