‘கொடி’க்கு பிறகு மீண்டும் வில்லியாக களமிறங்கும் திரிஷா! யார் ஹீரோனு தெரியுமா?

by Rohini |
trisha
X

trisha

Trisha: இன்று தமிழ் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார் திரிஷா. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்ற ஒரு அழகான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அடுத்தடுத்த பெரிய நடிகர்களின் படங்களில் கமிட் ஆகி இன்று ஒரு டாப் நடிகையாக மீண்டும் தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார் திரிஷா.

தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் திரிஷா தெலுங்கில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அவர் நடித்து கடைசியில் ரிலீஸ் ஆன திரைப்படம் லியோ. அந்த படத்திற்குப் பிறகு தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். அதற்கு அடுத்தபடியாக மீண்டும் பிரபாஸுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் திரிஷா.

இதையும் படிங்க: அம்மாவை கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திய தளபதி…வெளியான பரபரப்பு வீடியோ!..

அந்த படத்திற்கு ஸ்பிரிட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பொருத்தவரைக்கும் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் அதில் ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய இரண்டுமே பிரபாஸ் தான் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் சொல்லப்படுகிறது.

இதில் வில்லன் பிரபாஸுக்கு ஜோடியாக தான் திரிஷா நடிக்க இருக்கிறாராம். மேலும் இந்த ஸ்பிரிட் படத்தை பொருத்தவரைக்கும் ஹீரோவாகிய ஒரு பிரபாஸ் போலீஸ் கதாபாத்திரத்திலும் வில்லன் பிரபாஸை தேடுவது மாதிரியும் ஆன கதைக்களம் தான் இந்த படம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘இந்தியன் 2’ எடுக்கும் போது ஷங்கர் தூங்கிருப்பாரு! ரஜினி நண்பரே இப்படி சொல்லலாமா?

அதனால் ஒருவேளை வில்லனுக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதால் அவரும் ஒரு வில்லி கதாபாத்திரத்தில் தான் நடிக்கப் போகிறார் என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. அப்படி இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் திரிஷா வில்லியா நடிக்கும் இரண்டாவது திரைப்படமாக இந்த ஸ்பிரிட் திரைப்படம் இருக்கும்.

prabhas

prabhas

இதற்கு முன் தமிழில் தனுஷுடன் இணைந்து கொடி என்ற படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார் திரிஷா. அதன் பிறகு இந்த ஸ்பிரிட் படத்தில் தான் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் கொரியன் ஆக்டர் டான் லீ என்ற ஒரு நடிகரும் வில்லனாக நடிக்கிறாராம். ஏற்கனவே பிரபாஸ் நடித்து கடைசியாக வெளியான கல்கி திரைப்படம் 1200 கோடி வசூலைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. அதனால் இந்த படத்தின் மீது ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதையும் படிங்க: இத விட ஒரு கிஃப்ட் எதுவும் இல்ல! தாய் ஷோபாவிடம் இருந்து விஜய்க்கு பறந்த செய்தி

Next Story