Vaadivasal: மீண்டும் தள்ளி போகுதா? ‘வாடிவாசல்’ பின் வாசல் வழியா போகாம இருந்தா சரி..

by Rohini |   ( Updated:2025-04-11 04:55:22  )
vasal
X

vasal

Vaadivasal: சூர்யா நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வாடிவாசல். கங்குவா திரைப்படத்திற்கு முன்பே இந்த படத்தை பற்றி ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அளவுக்கு வாடிவாசல் திரைப்படம் சம்பந்தமான சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதற்காக சூர்யா ஒரு காளை மாட்டை வாங்கி அதனுடன் பயிற்சி எடுத்து வருவதாகவும் தனது சொந்த ஊரில் அந்த மாட்டை பிடித்து தெருவில் நடந்து வருவது மாதிரியான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இதற்காக சில மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவையும் கடந்த ஆண்டு படக்குழு வெளியிட்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படம் தான் வாடிவாசல். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறா.ர் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படம் உடனடியாக தொடங்கி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சில பல காரணங்களால் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமல் இருக்கின்றன. ஒரு பக்கம் சூர்யா படங்களில் பிஸியாக இருக்க இன்னொரு பக்கம் வெற்றி மாறனும் வேறு படங்களை இயக்கும் வேலைகளிலும் பிசியாக இருந்தார். தற்போது சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. அதற்கு அடுத்தபடியாக அவருடைய 45 ஆவது படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி வருகிறார் .

இந்த படத்திற்கு பிறகு தான் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என செய்தி வெளியானது. ஆனால் இந்த படத்திற்காக இசையமைக்கும் பணிகளை தொடங்கி விட்டதாக ஜிவி பிரகாஷ் சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் தயாரிப்பாளர் தாணு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் எனக் கூறியிருந்தார். ஆனால் தற்போது வந்த தகவலின் படி ஆகஸ்ட் எட்டாம் தேதி தான் இந்த படப்பிடிப்பு தொடங்க இருக்கிறதாம்.

அதனால் ரசிகர்கள் இன்னும் ஏமாற்றம்தான் அடைந்துள்ளனர். ஏனெனில் கடந்த ஆண்டிலிருந்து படப்பிடிப்பு இப்போது தொடங்கும் அப்போது தொடங்கும் என கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்து விட்டது. அதனால் ஜூலையில் இருந்து இப்பொழுது ஆகஸ்ட் என்று சொல்லும் போது அந்த படத்தின் மீது இருந்த நம்பிக்கையே ரசிகர்களிடம் போய்விட்டது.

Next Story