கோட் படத்தோட முதல் நாளில் இருந்தே அதுல தான் கவனமாம்..! சொன்னது விஜயின் தீவிர ரசிகை!

by sankaran v |   ( Updated:2024-09-02 02:14:00  )
Goat movie
X

Goat movie

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய பிரம்மாண்டமான படம் கோட். ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸின் மாபெரும் தயாரிப்பு. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்த நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி. இவர் விஜயின் தீவிர ரசிகையாம்.

Also read: கோட் படத்தின் முதல் 60 செகண்ட்ஸ் எப்படி இருக்கும் தெரியுமா? புது புது அப்டேட் கொடுத்த பிரேம்ஜி

செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் வெளியாகிறது. இதற்கான புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மீடியாக்களில் அர்ச்சனா கல்பாத்தியும் பேட்டி கொடுத்து வருகிறார்.
அவர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...

கோட் படத்தைப் பொருத்தவரை அரசியல் அழுத்தங்கள் எதுவும் இல்லை. ஆனால் பொதுவாகவே சிலர் அப்படி இருக்குமோ என ஊகித்து வருகின்றனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை. உண்மையில் சொல்லப்போனால் படப்பிடிப்புக்கான அனுமதிகள் நாங்க கேட்டதும் உடனடியாக வழங்கப்பட்டது. காவல்துறையும், பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தன.

ஒரு படத்துக்கு அதிக விளம்பரம் தேவையில்லை. அது நல்லதல்ல என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை. அதனால் கோட் படத்தின் முதல் நாளில் இருந்தே இந்த விஷயத்தில் நான் மிகவும் கவனமாக இருந்தேன். இது ஒரு தளபதி படம். இதற்கு பரபரப்பு தேவையில்லை. அவரது படத்திற்கு எல்லாமே இயல்பாக அமையும்.

Archana kalpathi

Archana kalpathi

எங்கள் நிறுவனத்தின் 25வது படம் இது. அதனால் மற்ற படைப்புகளில் இருந்து சற்று விலகி மாறுபட்டதாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். விஜயின் கேரியரில் இந்தப் படம் மிகச்சிறந்த ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறோம். அவரது ரசிகர்களும் இந்தப் படத்தை மிகவும் விரும்புவார்கள்.

படத்தைப் பற்றி அவர் சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தை எடுப்பது எங்களுக்கு புது அனுபவமாகவும், மிகவும் சவாலானதாகவும் இருந்தது. பெரிய நட்சத்திரம், பெரிய படக்குழுவினருடன் ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

படத்தைப் பொருத்தவரை நேரம் போறதே தெரியவில்லை. இந்தப் படத்தில் டெக்னீஷியன்களும் சிறப்பாகப் பணியாற்றி உள்ளனர். படம் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா என பலரும் நடித்துள்ளார்கள். அவர்களில் யாரிடம் முதலில் நடிப்பதற்கு அணுகினீர்கள் என்று கேட்டதற்கு பிரசாந்த் என்றார். அதை அடுத்து AI டெக்னாலஜியில் விஜயகாந்தை வைத்து எடுப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்று அதைப் பற்றி அறிந்து சிறப்பாக உருவாக்கியதாகவும் குறிப்பிட்டார்.

Next Story