தம்பிக்காக அண்ணன் எடுத்த ரிஸ்க்! ஒரேடியா உட்கார வைத்த ஏஜிஎஸ்.. தனி ஒருவனுக்கு இப்படி ஒரு நிலைமையா?

Published on: May 23, 2024
jayam ravi
---Advertisement---

Actor Jayam Ravi: தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. விஜய் ,அஜித், சூர்யா இவர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகராக இருக்கும் ஜெயம் ரவி இவர்களிடத்திற்கு எப்படியாவது வரவேண்டும் என தன் படங்களின் மூலம் முயற்சித்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால் சமீப காலமாக அவரின் படங்கள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

கதைகளை தேர்ந்தெடுப்பதில் ஜெயம் ரவி சொதப்புவதாகவே தெரிகிறது. ஆனால் இன்னொரு பக்கம் தனது சம்பளத்தை மட்டும் அதிகரித்துக் கொண்டே போகிறார். அவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டும் தான் பெரிய அளவில் ஓடி சாதனை படைத்தது. அதுவும் ஐந்து ஹீரோக்களில் அவரும் ஒருவராக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: வாளிப்பான உடம்ப பார்த்தே இளச்சி போயிட்டோம்!.. ஏங்க வைக்கும் மாளவிகா மோகனன்!..

சமீபகாலமாக அவர் நடித்த எந்த ஒரு படமும் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவ ஏற்கனவே ஹிட்டான தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் மோகன் ராஜா இறங்கி இருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த நிலையில் தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான பட்ஜெட் 120 கோடி என மோகன் ராஜா ஏஜிஎஸ் நிறுவனத்திடம் சொல்ல அதிர்ச்சியில் உறைந்து விட்டது அந்த நிறுவனம்.

70 முக்கோடி பட்ஜெட் என்றால் பண்ணுவோம் அல்லது ஜெயம் ரவிக்கு இரண்டு மூன்று படங்கள் ஹிட் ஆகட்டும் அதன் பிறகு தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை தொடங்கலாம் என இப்போதைக்கு அந்த படத்தை நிறுத்தி வைத்திருக்கிறதாம் ஏஜிஎஸ் நிறுவனம். அதனால் கிரிக்கெட் மேட்ச் போல ஜெயம் ரவி கட்டாயமாக ஒரு இரண்டு வெற்றியையாவது கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க: சூர்யாவுக்கு எதிரா வெற்றிமாறன் செஞ்ச காரியம்! அடுத்து என்ன? வாடிவாசலுக்கு டாட்டாதான்..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.