ஏஐ யுகத்தில் மாஸ் ஹிட் படங்களில் ஒரே காட்சி நடந்தா என்ன ஆகும்? ​​​​​​​

ஏஐ தற்போது மிகப்பெரிய வளர்ச்சி பெற்று வரும் நிலையில் சினிமாவும் இதில் சிக்கலை சந்திக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
movie

தமிழ் சினிமாவில் நிறைய படங்களின் சஸ்பென்ஸ் ஒரு கட்டத்தில் உடைந்தாலே அது கிளைமேக்ஸ் வரை கூட செல்லாது. அப்படி ஒரு விஷயம் நடந்தால் எப்படி இருக்கும் என்ற ஏஐ வீடியோ இணையத்தில் உலா வருகிறது. 

தற்போது ஏஐ வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் நிறைய வீடியோக்களை நடக்காமலே உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சினிமாவுக்குள்ளும் இந்த ஏஐ விளையாட்டு அதிகரித்து இருக்கிறது. 

விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட பல எடிட்டிங்களுக்கு முன்பெல்லாம் பெரிய தொகை செலவு செய்ய வேண்டி இருந்தது. ஆனால் தற்போது அது போல இல்லாமல் வெறும் ஏஐ சாப்ட்வேரை கொண்டே அந்த வேலையை சினிமாவில் முடித்து விடுகின்றனர். 

இப்படி இருக்கும் போது பல குறும்புக்காரர்கள் சில ஹிட் படங்களின் ட்விஸ்ட்டை காலி செய்து படத்திற்கு அல்டர்நேட் எண்ட்டிங்கை உருவாக்கி கலகலக்க வைக்கின்றனர். அந்த வகையில் சூப்பர்ஹிட் படமான முத்து படத்தில் ரஜினிகாந்தின் அப்பா ஒரு பணக்காரர் என்ற உண்மையை சொல்லிவிட்டாலே பல சிக்கல் இருந்து இருக்காது. 


லவ் டுடேவில் போனை உடைப்பது, சர்வம் படத்தில் திரிஷாவை சைக்கிள் ஓட்ட விடாமல் தடுப்பது, ஜீன்ஸ் படத்தில் ஜூஸ் வாங்கி கொடுப்பது வரை கலகலப்பாக செய்து கலக்கி விட்டு இருக்கின்றனர். இப்போது இந்த வீடியோக்கள் தான் இணையத்தில் வைரல்.. 


 

From Around the web