Connect with us
ajith

Cinema News

அப்பாவை நினைத்து உருகி உருகி அஜித் நடித்த படம்!.. இவ்வளவு பாசமா?!…

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அஜித்தின் தந்தை சுப்ரமணியம் நேற்று முன் தினம் காலையில் மரணமடைந்தார். செய்தி கேட்டு அஜித் ரசிகர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

ajith1

ajith1

அதிகாலையில் மரணமடைந்த செய்தி ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டு அதன் பின் சில மணி நேரங்களிலேயே தந்தைக்கான இறுதிச்சடங்கையும் விறுவிறுப்பாக மிகவும் எளிதாக செய்து முடித்தார் அஜித் . எந்த ஒரு பரப்பரப்பும் இல்லாமல் தன் வீட்டாருடன் சேர்ந்து யாருக்கும் எந்த ஒரு தொந்தரவும் கொடுக்காமல் இறுதிச்சடங்கை முடித்தார்.

அஜித் தந்தை மரணத்திற்கு சில பிரபலங்கள் தங்களது இரங்கல்களை குறுஞ்செய்திகளாக அனுப்பியிருந்தனர். சில பேர் நேரிலேயே சென்று தங்களது இரங்கல்களை தெரிவித்தனர். பிரசன்னா, மிர்ச்சி சிவா, சிம்பு,விஜய் , மற்றும் சில இயக்குனர்கள் நேரில் போய் அஜித்தை சந்தித்தனர்.

ajith2

ajith2

இந்த நிலையில் அஜித்தின் தந்தை மிகவும் எளிமையானவராம். அந்த எளிமையை தன் மூன்று பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவர் சொன்ன ஒரே வார்த்தை ‘தலக்கணம் இல்லாமல் தாழ்ந்து செல்’ என்பதை இன்று வரை அஜித் கடைபிடித்து வருகிறார்.

மேலும் அஜித்திற்கு பக்கபலமாகவும் இருந்துள்ளார். தந்தையை ஒரு ரோல்மாடலாகவே வைத்திருக்கிறார் அஜித். தான் துவண்டிருந்த சமயத்தில் தாயை விட அவரது தந்தை தான் அஜித்திற்கு பக்கபலமாக இருந்துள்ளாராம். இதனால் தான் அஜித் நடித்த படமான ‘கிரீடம்’ படம் கூட ஒரு தந்தை மகன் பாசத்தை அடிப்படையாக கொண்டு அமைந்ததனால் அஜித் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாராம்.

ajith3

ajith rajkiran

மேலும் அந்தப் படத்தில் அஜித்திற்கு அப்பாவாக ராஜ்கிரண் நடித்திருப்பார். நடிக்கும் போது தன் தந்தையின் குணாதிசயங்களை ராஜ்கிரணிடம் சொல்லி அதை உள்வாங்கி கொண்டு நடிக்க சொன்னாராம் அஜித். அதனாலேயே அந்தப் படம் அஜித்திற்கு மிகவும் பிடித்த படமாகவும் அமைந்ததாம். இந்த செய்தியை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க : வேற யாரையாவது வச்சி படம் எடுத்துக்கோ!.. சிம்புவிடம் கடுப்பான கே.எஸ்.ரவிக்குமார்…

google news
Continue Reading

More in Cinema News

To Top