Ajith: கோலிவுட்டில் ஒரு மாஸ் ஹீரோவாக அல்டிமேட் ஸ்டாராக என்றுமே மக்கள் மனதில் நிலைத்து நிற்கக் கூடிய நடிகராக அஜித் இருந்து வருகிறார். இவருக்குண்டான க்ரேஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
அனைவரும் ஆச்சரியப்பட்டு பார்க்கும் ஒரு நடிகராக இருக்கிறார் அஜித். பெரும்பாலும் அஜித்தை பற்றி சொல்லும் போது பக்கா ஜெண்டில்மேன் என்று தான் சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: சினிமாவில் இருக்கும் ஒரே யோக்கியன்! விசித்ரா சொன்ன அந்த நடிகர் யார் தெரியுமா?
அந்தளவுக்கு மற்றவர்களிடம் ஒரு இணக்கமான நெருக்கத்தை எப்போதுமே பின்பற்றி வருகிறார் அஜித். தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார்.
ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிக்கும் அஜித் விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் மட்டும் பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அக்டோபர் மாதம் படம் ரிலீஸாகும் என்று கூறி வந்த நிலையில் அதே மாதத்தில் சிவகார்த்திகேயன் ரஜினி சூர்யா படங்கள் ரிலீஸாவதால் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெயிலரிடம் மண்ணை கவ்விய கோட் வசூல்… இத நோட் பண்ணுங்க? ஷாக்கிங் ரிப்போர்ட்
இதற்கிடையில் குட் பேட் அக்லி படம் அடுத்த வருடம் பொங்கல் என தேதியை உறுதி செய்து விட்டது. இந்த நிலையில் சினிமா வரலாற்றில் அஜித்தின் ஒரு படம் பண்ண சாதனையை வேறு எந்த படமும் பண்ணவில்லை என திருப்பூர் சுப்பிரமணியன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதாவது நேற்று விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 800 ஸ்கிரீனில் வெளியாகியிருக்கிறதாம் கோட் திரைப்படம்.
இதையும் படிங்க: ரஜினியாக முடியல.. இப்ப அடுத்த விஜய் ஆகணுமா?!.. எஸ்.கே.வை சீண்டும் புளூசட்ட மாறன்..
ஆனால் சினிமா ஆரம்பித்த 100 வருடத்தில் அஜித்தின் வலிமை படம்தான் 960 ஸ்கீரினில் ரிலீஸ் ஆகியிருப்பதாக திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். வேறெந்த படமும் இந்தளவு அதிக ஸ்கிரீனில் வெளியானது இல்லை என்று கூறுகிறார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…