பெயரிலிருந்து தனுஷை எடுக்காத ஐஸ்வர்யா!... அப்ப வெளிவந்த செய்தி உண்மையா?....

by சிவா |   ( Updated:2022-02-15 00:38:05  )
பெயரிலிருந்து தனுஷை எடுக்காத ஐஸ்வர்யா!... அப்ப வெளிவந்த செய்தி உண்மையா?....
X

தனுஷும் அவரின் மனைவியான ஐஸ்வர்யாவும் சமீபத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஐஸ்வர்யா இந்த முடிவை எடுத்ததில் ரஜினிக்கு உடன்பாடு இல்லை எனவும், இதனால் அவர் ஐஸ்வர்யா மீது கோபத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

danush

ஒருபக்கம், விவகாரத்தை முடிவை கைவிடுமாறு கஸ்தூரிராஜா தனது மகன் தனுஷிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தனுஷின் குடும்பத்தினருக்கும் இதில் விருப்பமில்லை எனக்கூறப்படுகிறது. எனவே, விரைவில் அவர் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. மேலும், இரு குடும்பத்தினரும் திருப்பதி சென்று வழிபட்டு, தனுஷும், ஐஸ்வர்யாவும் ஒன்றாக வாழ முடிவு செய்துவிட்டு சென்னை திரும்புவார்கள் என்றெல்லாம் செய்திகள் கசிந்தது.

இதையும் படிங்க: கைவிட்ட தனுஷ்… காப்பாற்றிய சிம்பு… இவரயா எல்லாரும் திட்றீங்க?…..

danush

சமீபத்தில் படப்பிடிப்பிற்காக தனுஷும், ஒரு ஆல்பம் பாடல் வேலைக்காக ஐஸ்வர்யாவும் ஹைதராபாத் சென்றிருந்த போது இருவரும் ஒரே ஹோட்டலில்தான் அறை எடுத்து தங்கினார். அப்போது, அவர்கள் பேசிக்கொண்டார்களா என்பது கூட தெரியாமல் இருந்தது.

instagram

இந்நிலையில், ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் தனுஷை நீக்கவில்லை. அதாவது, ஐஸ்வர்யா தனுஷ் என்கிற பெயரை அவர் இன்னும் மாற்றவே இல்லை. அதேபோல், டிவிட்டரில் ஐஸ்வர்யா தனுஷ் என்கிற பெயரில்தான் அவர் நீடித்து வருகிறார்.

twitt

தனுஷ் அவர் மனதில் இல்லை என்றால் இந்நேரம் இரண்டிலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என பெயரை மாற்றியிருப்பார். எனவே, நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம் எனக்கூறுகிறார்கள் திரையுலகினர்.

Next Story