ஏலே இதுக்கெல்லாம் விவகாரத்தா..? ஐஸ்வர்யா வீட்டுல கூட இந்த பிரச்னை தானாம்… சுத்தம்..!

Published on: December 21, 2023
---Advertisement---

Aishwarya Rai Bachchan: இந்திய சினிமாவின் தற்போதைய ஹாட் டாப்பிக்காகி இருப்பது ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனுக்குமான விவகாரத்து செய்தி தான். ஆனால் தற்போது அதில் ஒரு முக்கிய தகவலும் ரிலீஸாகி இருக்கிறது. இதை கேட்ட ரசிகர்களுக்கு எல்லா இடத்துலையுமே இதான் பிரச்னை என கலாய்த்து வருகின்றனர்.

இந்திய அழகியாக முடிசூடிக்கொண்டவர் ஐஸ்வர்யா ராய். மணிரத்னம் இயக்கிய தமிழ் படமான இருவர் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். முதல் படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்து அவருக்கு இந்தியில் பட வாய்ப்பு கிடைத்தால் அது ப்ளாப் தான் ஆனது.

இதையும் படிங்க்: வீட்டுக்கு வந்த பிரபலத்தின் காலை அளவெடுத்த ரஜினி.. மனுஷன் இப்படியெல்லாம் யோசிப்பாரா?!..

பின்னர் ஜீன்ஸ் படத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட் நாயகியானார். இதை தொடர்ந்து மீண்டும் இந்தி பக்கம் போக இந்த முறை அவருக்கு நிறைய நல்ல பட வாய்ப்புகள் வந்தது. வரிசையாக ஹிட் கொடுத்தார். மணிரத்னம் இயக்கிய ராவணன், பொன்னியின் செல்வன் படங்களில் தமிழில் நடித்து இருக்கிறார்.

சல்மான்கானுடன் தீவிர காதலில் இருந்தவர். திடீரென அவரை ப்ரேக் அப் செய்துவிட்டு விவேக் ஓபராயுடன் காதல் வயப்பட்டார். அதுவும் கடைசியில் பெயிலியர் ஆனது. இதையடுத்து 2007ம் ஆண்டு அபிஷேக் பச்சனையும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். முதல் சில வருஷம் நடிப்பிற்கு ப்ரேக் கொடுத்தவர். தொடர்ந்து நடித்து வந்தார்.

இதையும் படிங்க்: நான்தான்னு யார் சொன்னா?.. என்னை வாழ வச்சதே ரஜினிதான்!.. மனம் திறந்து பேசிய பாலச்சந்தர்…

அபிஷேக்கிடம் அம்மா முக்கியமா? இல்லை நான் வேண்டுமா? எனக் கேட்க தொடங்கி இருப்பதாக கூட பிரச்னை அரசல்புரசலாக மீடியாக்களில் கசிந்து இருக்கிறது. இன்னும் விவகாரத்து பக்கம் போகவில்லை. இதில் அபிஷேக் அம்மா பக்கம் நின்றால் ஒருவேளை தம்பதி கோர்ட் படியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.