’ரோஜா’ படத்த பாக்கும் போதெல்லாம் செருப்பால அடிச்சிப்பேன்...! ஆதங்கத்தை வெளியிட்ட நடிகை
90களில் இளசுகளின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படம். இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சாமி, மதுபாலா, ஜனகராஜ் உட்பட பலரும் நடித்திருந்தனர். படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.
இந்த படத்தின் மூலம் தான் ஏஆர் ரகுமான இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் படியாக இருக்கும். சொந்த கிராமத்தில் இருந்து காஷ்மீர் வரைக்கும் உள்ள காட்சிகள் அனைத்தும் இன்றளவும் நம் நினைவுகளை விட்டு நீங்காமல் பதிந்து கிடக்கின்றன.
அந்த மாதிரியான காதல், ரொமான்ஸ், திரில்லிங் கலந்த படம் இன்று வரை வரவில்லை என்றே சொல்லலாம். இப்படி இருக்கையில் இந்த மாதிரியான ஒரு படத்தில் நடிக்க தவறிய ஒரு நடிகையை பற்றி நாம் நினைவு கூற வேண்டும். ஆம். முதலில் மணிரத்னம் மதுபாலா கதாபாத்திரத்திற்கு நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா பாஸ்கரனை தான் அணுகினாராம். ஆனால் அவரது பாட்டி ஒரு தெலுங்கு படத்தில் ஐஸ்வர்யா நடிப்பதற்கு முன்பண தொகை வாங்கி விட்டேன்.
அதனால் அதை மீற முடியாது என திருப்பி அனுப்பி விட்டாராம். ஆனால் அந்த தெலுங்கு படம் ஏதோ ஒரு காரணத்தால் அப்படியே டிராப் ஆகி விட இந்த பக்கம் ரோஜா படத்திற்கு மதுபாலா புக் ஆகி விட ஒரு மாதமாக சும்மாதான் இருந்தாராம். ஐஸ்வர்யா கூறும் போது “ இப்ப என் பாட்டி இருந்தால் அதை கழுத்து நெரிச்சு நானே கொன்னுடுவேன். அதால அந்த நல்ல படமே போச்சு” என கூறினார். மேலும் ரோஜா படத்தை கோயம்புத்தூரில் ஐஸ்வர்யாவும் அவரது பாட்டியும் தான் பார்க்க போனார்களாம். படம் பாத்து கொண்டு இருக்கும் போது வயித்தெறிச்சலில் செருப்பை கழட்டி நானே என் தலையில அடிச்சுக்கிட்டேன் என்று கூறினார்.