Connect with us

Cinema News

தனுஷுன்னே நினைச்சிட்டோம்!.. தனுஷ் மகன் இவ்ளோ பெருசா வளந்துட்டாரா?…

துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதன் பின் காதல் கொண்டேன், திருடா திருடி என 3 தொடர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை திரும்பி பார்க்க வைத்தவர். அதன்பின் அவரின் கிராப் இறங்கவே இல்லை.

ஒருபக்கம் கமர்ஷியல் மசாலா படங்களிலும், ஒருபக்கம் நடிப்புக்கு தீனி போடும் புதுப்பேட்டை, ஆடுகளம், வட சென்னை, அசுரன், கர்ணன் போன்ற படங்களிலும் அவர் நடித்து வருகிறார். அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் அவர் பெற்றார்.

dhanush

இவர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் யாத்ரா. இளைய மகன் லிங்கா.

இந்நிலையில், நேற்று யாத்ரா தனது பிறந்தநாளை கொண்டாடினர். எனவே, அவருக்கு வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா ‘உன் அம்மாவாக இருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டேன்’ என உருகியதோடு, அவரை கட்டியணைத்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவெனில் யாத்ரா பார்ப்பதற்கு அப்படியே தனுஷ் மாதிரியே இருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அது தனுஷ்தான் என நினைத்தனர். அதன்பின் அது தனுஷின் மகன் என தெரிந்துவுடன் ஆச்சர்யப்பட்டனர்.

aishwarya

google news
Continue Reading

More in Cinema News

To Top