வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா?.. ரசிகர்களின் தாறுமாறு கமெண்டில் குதூகலிக்கும் பூங்குழலி..

by Rohini |   ( Updated:2023-04-30 12:44:21  )
aish
X

aish

தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.அதுவும் பொன்னியின் செல்வன் படத்திற்கு அப்புறம் அவரது மார்கெட் எல்லைதாண்டி சென்று விட்டது. ஒரு தைரியமான பெண்ணாக அந்த படத்தில் நடித்தது அனைவரையும் மிகவும் ஈர்த்தது.

முதல் பாகம் வெளியானதும் கட்டா குஸ்தி படத்தில் லீடு ரோலில் நடித்து அந்தப் படமும்
அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தற்போது ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

நடிப்பது மட்டுமில்லாமல் ஒரு சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
இப்போது இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. மேலும் புரோமோஷன்களில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

நடிகைகளுக்கே உண்டான பிடித்தமான பொழுது போக்குகாக இப்போது சமூக வலைதளம் ஆகிவிட்டது. ஐஸ்வர்யா லட்சுமியும் அதில் புகுந்து விளையாடி வருகிறார். தன்னுடைய அன்றாட புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தனது அல்ட்ரா லுக் காஸ்டியூமில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் நெஞ்சங்களை உறைய வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

Next Story