என்ன அக்கா மேரேஜ்ல interest இல்லனு சொன்னீங்க?.. இவர் தான் அவரா?.. வைரலாகும் கட்டாகுஸ்தி நாயகி புகைப்படம்..

by Rohini |   ( Updated:2023-01-12 08:54:04  )
aish
X

aishu

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளரும் கூட. ரொம்பவும் தைரியமான நடிகையும் கூட. மாடலிங்கில் அதிக ஆர்வமும் கொண்டவராகவும் விளங்குகிறார்.

aish1

aish1

ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பொன்னியின் செல்வன் படம் தான் இவரை ஊரறியவைத்தது. அந்த அளவுக்கு பூங்குழலியாக மக்கள் மனதில் நின்று பேசினார். அந்த படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் மிகவும் குறிப்பிடத்தக்கது. அதை அழகாக படம் முழுக்க நகர்த்திக் கொண்டு போயிருப்பார்.

இதனையடுத்து பல படங்களில் நடித்தார். ஆனால் அந்த அளவுக்கு எதிர்பார்ப்பை பெறவில்லை. சமீபத்தில் விஷ்ணுவிஷாலுடன் நடித்த கட்டா குஸ்தி படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது. அந்த படத்தில் குஸ்தியில் கலக்கியிருப்பார் ஐஸ்வர்யா லட்சுமி. இதற்காக பல உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டார்.

aish2

aish2

படத்தில் அதன் பயன் நன்றாகவே தெரிந்தது. படமும் வெற்றி பெற்றது. படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பல இடங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்த ஐஸ்வர்யா லட்சுமி திருமணத்தை பற்றியும் பேசியிருந்தார். திருமணத்தில் எனக்கு ஆர்வம் இல்லை என்று ஓப்பனாகவே ஒரு மேடையில் கூறினார்.

ஆனால் இவரின் இன்ஸ்டாவில் போட்டப் பதிவால் அதை பார்த்த ரசிகர்கள் கேள்விக் கனைகளை தெறிக்க விடுகின்றனர். ஐஸ்வர்யா லட்சுமி நடிகர் அர்ஜூன் தாஸுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கூடவே ஹார்ட்டின் சிம்பலையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இவர் தான் அவரா? என்று கேட்டு வருகின்றனர். செய்திகளிலும் அர்ஜூன் தாஸை காதலிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி என்றும் வெளியாகி வைரலாகி வருகிறது.

aish3

aishu arjun

Next Story