Categories: Entertainment News

அழகே அந்த கண்ணால பாக்குற சாக்குல தாக்காத!.. கட்டா குஸ்தி நடிகையின் க்யூட் கிளிக்ஸ்…

கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி கடந்த 5 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். துவக்கத்தில் மலையாள படங்களில் நடித்தார். தற்போது தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார்.

ஆக்‌ஷன், ஜகமே தந்திரம் ஆகிய திரைப்படங்கள் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பின் கார்கி, கேப்டன் என சில படங்களில் நடித்தாலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

அதோடு, சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்த கட்டா குஸ்தி திரைப்படம் அவரை ரசிகர்களிடம் மேலும் நெருக்கமாக்கியுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழில் ஐஸ்வர்யா ஒரு ரவுண்டு வருவார் என கணிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: பீச்சுக்கு காத்துவாங்க போன கே.பி.சுந்தராம்பாள்… தமிழ் சினிமாவிற்கு கிடைத்ததோ ஒரு டெரிஃபிக் வில்லன்… ஆஹா!!

ஒருபக்கம், தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சை செய்து வருகிறார். இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Published by
சிவா