என்னா பொண்ணுடா!. மனசு எங்ககிட்ட இல்ல!.. பளிச் அழகை காட்டி மயக்கும் ஐஸ்வர்யா லட்சுமி...
Asihwarya Lekshmi: கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு சினிமா நடிகை ஆகவேண்டும் என்கிற ஆசையே இருந்தது இல்லை. அதைவிட ஆச்சர்யம் இவர் ஒரு மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்றவர். அதாவது மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராகாமல் மாடலிங் துறைக்கு வந்துவிட்டார். கல்லூரி படப்பிடிக்கு பின் மாடலிங் துறையில் நுழைந்தார்.
தனுஷ் நடித்து வெளியான ஜகமே தந்திரம் படம்தான் முதலில் வெளியானது என்றாலும் இவர் விஷால் நடித்த ஆக்ஷன் படத்தில்தான் முதலில் நடித்தார். கேரள நடிகை என்பதால் மிகவும் திறமை வாய்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். கேப்டன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், விஷ்ணு விஷாலுடன் இவர் நடித்த கட்டாகுஸ்தி திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. மலையாளத்தில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த கிங் ஆப் கோத்தா படத்திலும் நடித்திருந்தார். ஒருபக்கம் அழகான உடைகளை அணிந்து போட்டோஷுட் செய்து அந்த புகைப்படங்களையும் தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.