இந்த சிரிப்புலதான் விழுந்துட்டோம்!.. புடவையில் சிக்குன்னு நிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி…
எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு மருத்துவராகாமல் சினிமாவில் நடிக்க வந்த நடிகைகளில் ஐஸ்வர்யா லட்சுமியும் ஒருவர். 2014ம் வருடம் முதல் இவர் மாடலிங் துறையில் இருந்து வருகிறார்.
நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார். உண்மையில் இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையே இருந்தது இல்லையாம். ஆனால், மாடலிங் துறை இவரை சினிமாவுக்கு இழுத்து வந்துவிட்டது.
பல மலையாள திரைப்படங்களில் நடித்தார். விஷால் நடித்த ஆக்ஷன் படத்தில்தான் இவர் அறிமுகமானார். ஆனால், இப்படம் வெளியாவதற்கு முன்பு கார்த்தி சுப்பாராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் படம் வெளியாகி இவர் ரசிகர்களிடம் பிரபலமானார்.
கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி ஆகிய படங்களில் நடித்தர். இதில், பொன்னியின் செல்வனும், கட்டாகுஸ்தி திரைப்படமும் வெற்றி பெற்றது.
விரைவில் இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 படமும் வெளியாகவுள்ளது. எனவே, தற்போது அந்த படத்தின் புரமோஷன் பணிக்காக ஊர் ஊராக பறந்து வருகிறார்.
அதேபோல், அழகான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் புடவையில் க்யூட்டாக போஸ் ஒடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.