Aishwarya Lekshmi: தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. கேரளாவை சேர்ந்த இவர் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டாக்டராகாமல் மாடலிங் துறைக்கு போனவர் இவர். எம்.பி.பி.எஸ் படிக்கும்போதே சில விளம்பர படங்களில் நடித்தார்.
எனவே, அப்படியே சினிமாவுக்கும் வந்துவிட்டார். சில மலையாள படங்களில் நடித்தார். தமிழில் விஷால் நடித்த ஆக்ஷன் படத்தில்தான் முதலில் அறிமுகமானார். ஆனால், ஜகமே தந்திரம் முதலில் வெளிவந்துவிட்டது. அதன்பின் கார்கி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். விஷ்ணு விஷாலுடன் அவர் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
அதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த பொன்னியின் செல்வன் படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே இவர் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த கிங் ஆப் கோத்தா படத்திலும் நடித்திருந்தார். ஒருபக்கம், அரைகுறை உடைகளை அணிந்து போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறார்.
அந்த வகையில், திடீரென தூக்கலான கவர்ச்சி உடையில் அழகை காட்டி ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.