ஏற்கனவே உடைச்ச பர்னிச்சர் பத்தலையா?.. சிக்கிய சூப்பர் ஹீரோ… அடுத்த படத்துக்கு தயாரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
Aishwarya Rajinikanth: இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தினை தொடர்ந்து கேப்பே இல்லாமல் அடுத்த படத்தினை இயக்கும் பணிகளை தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதிலும் இந்த முறை ஒரு முன்னணி ஹீரோவை தன் ஹீரோவாக ஒப்பந்தம் செய்ய இருக்காராம்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் முதன்முதலில் உருவான திரைப்படம் 3. இப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசையமைக்க வொய் திஸ் கொலைவெறி பாடல் மிகப்பெரிய சூப்பர் ஹிட்டானது. படமும் பாசிட்டிவ் விமர்சனங்கள பெற்றது. இருந்தும் சமீபத்தில் இப்படம் ரி-ரிலீஸ் செய்யப்பட்ட போது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் அப்படி கேட்பார்னு எதிர்பார்க்கவே இல்ல!.. அழுதே விட்டேன்.. உருகும் சிவக்குமார்….
இதை தொடர்ந்து வை ராஜா வை படத்தினை இயக்கினாலும் அது பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. பின்னர் பல வருடம் கழித்து லால் சலாம் என்ற படத்தினை இயக்கி இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இப்படத்தில் விஷ்ணுவிஷால், விக்ராந்த் நடித்திருந்தனர்.
முக்கியமாக ரஜினிகாந்த் கேமியோ ரோலில் மொய்தீன் பாயாக நடித்து இருந்தார். பெரிய எதிர்பார்ப்புகளுடன் ரிலீஸான லால் சலாம் மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தினையே ரசிகர்களுக்கு கொடுத்தது. கேமியோ ரோலில் நடித்திருந்த ரஜினிக்கே அதிக காட்சிகள் இருந்ததாக விமர்சித்தனர்.
இதையும் படிங்க: கோடியை தாண்டி வசூல் செய்த முதல் படம்!.. அப்பவே மாஸ் காட்டிய எம்.ஜி.ஆர்!.. அட அந்த படமா?!..
படத்தில் நிறைய காட்சிகள் தேவையே இல்லாமல் இணைக்கப்பட்டதாக கூட விமர்சனம் எழுந்தது. இதனால் படத்தின் வசூல் செம அடி வாங்கியது. இதில் ஐஸ்வர்யா டைரக்ஷனுக்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் கூட எழுந்தது. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படத்தினை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும், அப்படத்தின் ஹீரோவாக சித்தார்த் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானை இப்படத்திற்கு இசையமைக்க வைக்க பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறதாம். இதுவரை புரோடக்ஷன் நிறுவனம் குறித்த முடிவும் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. சில பிரபல நிறுவனங்களிடம் ஐஸ்வர்யா பேச்சுவார்த்தையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.