Aishwarya rai: அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் விவாகரத்து.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

by Akhilan |   ( Updated:2024-11-08 09:11:32  )
Aishwarya rai: அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் விவாகரத்து.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…
X

Aishwarya rai_Abishek

Aishwarya rai: பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் பிரிந்துவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ள நிலையில் இணையத்தில் வீடியோ மீண்டும் வைரலாகி இருக்கிறது.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் பல மொழிகளில் நடித்து வருகிறார். ஹிந்தியில் பிரபல நடிகை ஆக இருந்த ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சினை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.

இதையும் படிங்க: Thuglife: ஒரு ரிலீஸ் தேதிக்கு இவ்வளவு அக்கப்போரா!… கடைசில ஆண்டவரையும் இப்படி மாத்திட்டீங்களேப்பா?!…

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது கணவரான நடிகர் அபிஷேக் பச்சனிடமிருந்து பிரிந்து வாழ்வதாக வதந்தி பரவி வருகிறது. இந்த சமயத்தில் தங்களுடைய திருமண வாழ்க்கை சண்டை குறித்து ஐஸ்வர்யாராய் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் மீண்டும் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில், எங்கள் திருமண வாழ்க்கையில் புதுமண தம்பதிகள் போல பல வருடங்களாக நண்பர்களிடமிருந்து வாழ்த்துக்கள் வந்து கொண்டே இருந்தது. அத்தகைய நட்பு எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் ஒருவருக்கொருவர் என்ன உணர்கிறோமோ?

இதையும் படிங்க: Amaran: அமரன் படத்துக்கு எதிராக வெடித்த போராட்டம்… திரையரங்குகளுக்கு பலத்த பாதுகாப்பு..

அதையே நாங்கள் மற்றவர்களிடம் பெற்றோம். எங்களைச் சுற்றி நாங்கள் புதுமண தம்பதிகள் போலவே வலம் வருகிறோம். தினமும் சண்டை போடுவதாக அபிஷேக் கூறுவது உண்மையா என்று கேட்டதற்கு, ஐஸ்வர்யா ராய், நாங்கள் 10 ஆண்டுகளாக ஒன்றாக இருக்கிறோம்.

முதலில் சாதாரணமாக இருந்தோம். சிலமுறை எங்களிடம் நாள் முழுவதும் சண்டைகள் உள்ளன. தஸ்வி படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை நிம்ரத் கவுருடன் அபிஷேக் இருந்த புகைப்படங்கள் பரவி வருகின்றன. அம்பானி வீட்டு திருமண விழாவிலும் ஐஸ்வர்யாராய் தனியாகவும், அபிஷேக பச்சன் தன்னுடைய குடும்பத்துடன் கலந்து கொண்டது பலரை முகம் சுளிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story