“அவருக்கு மட்டும் அவ்வளவு சம்பளமா??”… நயன்தாராவை பார்த்து வரிஞ்சி கட்டிக்கொண்டு வரும் டாப் நடிகைகள்…
பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் சமீப காலமாக அதிகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நயன்தாரா, தற்கால நடிகைகளில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். இவர் முன்னணி கதாநாயகியாக நடித்த “மாயா”, “கோலமாவு கோகிலா”, போன்ற படங்கள் வேற லெவலில் ஹிட் அடித்தது.
மேலும் நயன்தாரா, “கனெக்ட்” என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 22 ஆம் தேதி வெளியாகிறது. அதே போல் தற்போது நயன்தாரா, தென் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
நயன்தாராவை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த “பூமிகா” என்ற திரைப்படம் நல்ல வரவேற்பையே பெற்றது. மேலும் “தி கிரேட் இந்தியன் கிட்சன்”, “டிரைவர் ஜமூனா”, “ஃபர்ஹானா” போன்ற திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதே போல் ஆண்ட்ரியாவின் முன்னணி நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான “அனல் மேலே பனித்துளி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஹீரோக்களுக்கு நிகராக தங்களது சம்பளத்தை நடிகைகள் உயர்த்தி வருவதாக மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அப்பேட்டியில் பேசிய பிஸ்மி “ஹீரோயின் ஓரியன்டட் படங்களுக்கு தற்போது டிமான்ட் அதிகமாக உள்ளது. நயன்தாரா அதிக சம்பளம் கேட்பதால் அவருக்கு வரும் திரைப்படங்கள் எல்லாம் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, போன்றோருக்கு செல்கிறது.
மேலும் ஹீரோக்களுக்கு அதிக அளவில் சம்பளம் தருகிறார்கள். அதே போன்ற சம்பளத்தை தங்களுக்கும் தாருங்கள் என கூறி சம்பளத்தை உயர்த்திவிட்டார்கள். குறிப்பாக இதற்கு முன்பு 30 லட்சம் வாங்கி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார்” என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.