இதுக்குதான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தோம்.. ரசிகர்களை சூடாக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்…
பா.ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான அட்டக்கத்தி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அட்டக்கத்தி திரைப்படத்திற்கு பின் தொடர்ந்து சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
குறிப்பாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்தவர் இவர். அதன்பின் மற்ற நடிகர்களுடனும் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் பெண் கதாபத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார்.
கனா, க/பெ. ரணசிங்கம், பிளான் பி, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இண்டியன் கிச்சன் என பல படங்களிலும் நடித்தார். பெரும்பாலும், கிராமத்து கதைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், இவரும் சக நடிகைகளை போல விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கருப்பு சட்டையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.