அடியே கொல்லுறியே...அழக காட்டி அள்ளுறியே!.. ஐஸ்வர்யா ராஜேஷின் க்யூட் கிளிக்ஸ்...
முதலில் சின்னத்திரையில் நுழைந்து பின் சினிமாவுக்கு வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அட்டக்கத்தி உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த சில படங்கள் மூலம் கவனிக்கப்பட்டார்.
காக்கா முட்டை திரைப்படத்தில் இவரின் நடிப்பு இயக்குனர்கள் பலருக்கும் பிடித்துப்போனது. எனவே, இவரை தேடி வாய்ப்புகள் வந்தது.
வழக்கமான கதாநாயகியாக சில படங்களில் நடித்தாலும் ஒரு கட்டத்தில் பெண் கதாபத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார்.
தற்போது பெரும்பாலும் அப்படிப்பட்ட கதைகளில் அதிகம் நடித்து வருகிறார். மேலும், இவரும் மற்ற நடிகைகளை போல புதுப்புது உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், புடவையும், மல்லிகைப்பூவும் என அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.