எப்பா நயனே லேடி சூப்பர்ஸ்டாரா இருக்கட்டும்!..என் வேலையை நான் பாக்குறேன்!..கடுப்பான ஐஸ்வர்யா ராஜேஷ்!..

by Rohini |
aish_main_cine
X

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும் பெண்களை மையப்படுத்தும் கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

aish1_cine

அந்த வகையில் ‘டிரைவர் ஜமுனா’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்த படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிடம் நிரூபர் ஒருவர் ஏன் நீங்கள் பல ஹீரோக்களுக்கு ஜோடிகளாக நடிக்காமல் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறீர்கள்? நயனை இடத்தை பிடிக்கும் முயற்சியா? என்ற தொனியில் கேட்டார்.

இதையும் படிங்க : அதிக திரையரங்குகளை கைப்பற்றிய துணிவு… ரெட் ஜெயிண்ட்டுக்கு போகிறதா வாரிசு??

aish2_cine

அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் சற்று கடுப்புடன் தான் கூறியிருப்பார். ‘ நயன்தாரா தான் எப்பவுமே லேடி சூப்பர் ஸ்டார். அவங்கள மாறி நடிக்கனும், இவங்கள மாறி நடிக்கனும்னு எண்ணம் எல்லாம் இல்லை. என்னை தேடி வருகிற கதைகளை தான் ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறேன்’ என்றும்

aish3_cine

அவங்கதான் எப்பவுமே லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கூறினார். இந்த மாதிரி செய்திகள் நயன் திருமணம் ஆகி போனதில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷை சுற்றிக் கொண்டே வருகின்றது. ஐஸ்வர்யா ராஜேஷே அடுத்த நயன் என்று சொன்னாலும் தப்பில்லை. அந்த அளவுக்கு பிரம்மாதமாக நடிக்க கூடிய நடிகை. கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார்.

Next Story