வாவ்!.. மெர்சலா இருக்கு செல்லம்!.. ஸ்டன்னிங் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்…
ஆந்திராவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். துவக்கத்தில் ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார்.
அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் அவருக்கு கிடைத்த வாய்ப்புதான் காக்கா முட்டை. இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
அதன்பின் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்தார். ஒருகட்டத்தில் மற்ற ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடிக்க துவங்கினார். சமீபகாலமாக பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.
கனா, க.பெ.ரணசிங்கம், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இண்டியன் கிச்சன் போன்ற அவரின் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல ஐஸ்வர்யா ராஜேஷும் விதவிதமான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.