
Cinema News
அட்டர் ஃப்ளாப் ஆனாலும் அந்த விஷயத்தில் முரண்டுபிடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரில…
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். “மோ’, “கனா”, “பூமிகா”, “டிரைவர் ஜமுனா”, “தி கிரேட் இந்தியன் கிட்சன்” போன்ற படங்களை எடுத்துக்காட்டாக கூறலாம்.

Driver Jamuna
இதில் “டிரைவர் ஜமுனா” திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அதனை தொடர்ந்து “தி கிரேட் இந்தியன் கிட்சன்” திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது.
ஆனால் இத்திரைப்படங்கள் இரண்டும் பார்வையாளர்களை ஈர்க்கவில்லை. இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, தனது வீடியோ ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

The Great Indian Kitchen
அதாவது “டிரைவர் ஜமுனா” திரைப்படத்தின் தமிழ்நாட்டு ஷேர் 9 லட்சம் ரூபாய்தான் வந்ததாம். அதே போல் “தி கிரேட் இந்தியன் கிட்சன்” திரைப்படம் தமிழ்நாட்டு திரையரங்கு ஷேர் 6 லட்சம் ரூபாய்தான் வந்ததாம்.
இந்த வசூல் இந்த படங்களின் போஸ்டருக்கு செலவளிக்கப்பட்ட காசு கூட கிடையாதாம். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் இனி நடிக்கும் படங்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்களாம்.
இதையும் படிங்க: டபுள் மீனிங்க்ல கோல்டு மெடல் வாங்கிருப்பாரு போலயே!… வாலி எழுதிய ஷேம் ஷேம் பப்பி ஷேம் பாடல்கள்…