ஒன் சைடு காட்டினாலும் செம ஒர்த்து!. வேறலெவலில் இறங்கி விளையாடும் ஐஸ்வர்யா ராஜேஷ்...

Aishwarya Rajesh: சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தெலுங்கு குடும்பத்தில் பிறந்தாலும் தமிழ் நன்றாகவே பேசுவார். இவரின் அம்மா சினிமாவில் நடனம் ஆடியவர். அவரின் தாத்தா, அத்தை என அனைவருமே சினிமா துறையை சேர்ந்தவர்கள். ஐஸ்வர்யா சிறுமியாக இருக்கும்போதே தெலுங்கு படங்களில் நடித்தார்.
மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார். சில தொலைக்காட்சிகளில் ஆங்கராவும் இருந்தார். பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன்பின் மணிகண்டன் இயக்கத்தில் உருவான காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்தார்.
அதன்பின் விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து நடித்தார். ஒருகட்டத்தில் மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். ஏனெனில், விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி, விஷால், கார்த்தி, சூர்யா போன்ற நடிகர்கள் தனது படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷை ஜோடியாக போடவில்லை.
தமிழ் மட்டுமில்லாமல் சில தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் கதாநாயகியாக நடித்து சமீபத்தில் வெளியான எந்த படங்களும் ஓடவில்லை. எனவே, ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடிக்க முயற்சி செய்து வருகிறார். ஒருபக்கம், கட்டழகை வளைத்து வளைத்து காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.