உண்மையிலேயே நம்ம வீட்டு பொண்ணுதான்!.. ஃபிரீயா இருக்கும் போது ஐஸ்வர்யா ராஜேஷ் பண்ற காரியத்தை பாருங்க
தமிழ் சினிமாவில் ஒரு எதார்த்தமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட ஒரு தவிர்க்க முடியாத நடிகையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கிட்டத்தட்ட பழகுவதிலும் அதே பக்குவத்தோடுதான் பழக கூடியவர்.
பெரிய பட்ஜெட் படங்கள் தான் என்ற மன நிலையில் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர். இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாகவும் இருக்கிறார். பெண்களை மையப்படுத்தி எடுக்கும் படங்களிலும் நடித்து அதன் மூலமும் நன்மதிப்பை பெற்றவர்.
வெப் சீரிஸிலும் நடித்து அதன் மூலமும் எல்லாருக்கும் வேண்டப்பட்ட நடிகையாகவும் இருந்து வருகிறார்.சமீ அதனாலேயே அதிக படங்களில் நடித்து ஒரு பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் கூட அவரது அம்மா ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷை பற்றி கூறியது மிகவும் நெகிழ்ச்சிகரமாக இருந்தது.
ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வந்த ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பம் அவர் ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு தான் மிகவும் செழிப்பாக மாறிவிட்டதாம். சம்பாதிக்கிற அனைத்தையும் அவரது அம்மாவிடமே கொடுத்து விட்டு என்ன வேண்டுமோ வாங்கிக் கொள் என்று கூறிவிடுவாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதையும் படிங்க : விஜய்.. வெங்கட்பிரபு படத்தின் கதை இதுதானாம்… ஓ இப்படி ஒரு ப்ளான் இருக்கா?
இந்த நிலையில் இவரை பற்றிய ஒரு சீக்ரெட் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் வாரத்திற்கு மூன்று நாள்கள் ஜிம்மிற்கு போவாராம். மீதமுள்ள நாள்கள் யோகா, நடனம் என இருப்பாராம். அதுமட்டுமில்லாமல் வீட்டு வேலைகள் செய்வதற்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு மிகவும் பிடிக்குமாம். வீட்டு வேலையாள்கள் வராத போது அனைத்து வேலைகளையும் இவரே இருந்து செய்வாராம். அந்த அளவுக்கு மிகவும் கீழ்ப்படிந்த பெருந்தன்மையான நடிகையாகவே ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார்.