பட்டனை கழட்டி பசங்களை பாடாய் படுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!.. இது செம பிக்ஸ்!..

Aishwarya rajesh: குடும்பத்தில் சிலர் சினிமாவில் இருந்ததால் இயல்பாகவே சினிமாவில் நுழையும் ஆசை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்பட்டது. ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் போனார். சில டிவியில் ஆங்கராக கூட வேலை செய்திருக்கிறார். அதன்பின் சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டக்கத்தி படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் விஜய் சேதுபதியுடன் ரம்மி, தர்மதுரை, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். அவருடன் நடித்துதான் ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஆனால், விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வரவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் சின்ன சின்ன நடிகர்களுடன் நடித்தார். ஒரு கட்டத்தில் இவரும் நயன்தாராவை போல பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார்.
அப்படி அவர் நடித்த திட்டம் இரண்டு, தி கிரேட் இண்டியன் கிச்சன், ஃபாத்திமா என சில படங்களில் நடித்தாலும் கனா என்கிற படம் மட்டுமே ரசிகர்களை கவர்ந்து ஓடியது. மற்ற படங்கள் தோல்வியை சந்தித்தது. எனவே, மீண்டும் மற்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை தேடி வருகிறார்.
இப்போது தீயவர் கொலை நடுங்க, கருப்பர் நகரம், மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு, கட்டழகை தாறுமாறாக காண்பித்து அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், ஜீன்ஸ் பேண்ட், சட்டை அணிந்து அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.