மீண்டும் நயன்தாரா ரூட்டுக்கு தாவிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!

by ராம் சுதன் |
aishwarya rajesh
X

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரை உலகில் நடிக்க தெரிந்த மிக சில நடிகைகளில் முக்கியமானவர். துணை நடிகையாக அறிமுகமாகி திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர்.

நடிகை ஐஸ்வர்யா ரஜேஷ் தொலைகாட்சி தொகுப்பாளராக மீடியா உலகிற்கு வந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு திரை உலகிற்கு அறிமுகமானார், அடுத்த வீட்டு பெண் போன்ற எதார்த்த அழகியான இவருக்கு நடிப்பு திறமை இயற்கையாக அமைத்தது.

பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு தென்னிந்திய திரை அரங்கு நல்ல வரவேற்பும், விருதுகள் கொடுத்து அங்கீகாரமும் அளித்தது.

aishwarya rajesh

தற்போது மலையாளத்தில் வெளியான "தி கிரேட் இந்தியன் கிட்சன்" எனும் படத்தின் தமிழ் ரீமேக்கில் கதை நாயகியாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்க உள்ளார். படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக கதைக்கு முக்கியத்துவம் அதாவது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை அதிகம் தேர்வு செய்து நடிப்பார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷும் நயந்ன்தாரா வழியிலேயே செல்கிறார். அது அவருக்கு கை கொடுக்கிறாரா என்று பார்ப்போம்

Next Story