யோவ்..அவன் தான நீ...! நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்து கடுப்பான ஐஸ்வர்யா ராஜேஷ்...! கெஞ்சிய உதய நிதி..
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம். இந்த படத்தில் உதய நிதி ஸ்டாலின், தான்யா, சுரேஷ் சக்கரவர்த்தி, மயில்சாமி, ஆர் உட்பட பலரும் நடித்திருக்கின்றனர்.
படத்திற்கு திபு இசையமைத்திருக்கிறார். மேலும் படம் ஒரு சமூக கருத்துக்களை முன்வைப்பதாக இருந்தது. மேலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்துவதாகவே படம் இருந்தது. படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தின் படத்தின் 50 வது வெற்றி விழாவை படக்குழு கொண்டாடியது.
அப்போது விழாவில் கலந்து கொண்டு பேசிய உதய நிதி படத்தில் நடித்தவர்களையும் சக கலைஞர்களையும் பாராட்டி பேசினார். மேலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மாமன்னன் படத்திற்கு பிறகு நடிக்க போவதில்லை என கூறி வந்த உதய நிதி இன்னும் ஒரு படம் அருண்ராஜாவுடன் இணைந்து தான் பண்ணப் போறேன் என்ற தகவலையும் கூறினார்.
மேலும் பேசிய உதய நிதி படத்தை பார்த்து ஐஸ்வர்யா ராஜேஷ் என்னை போனில் தொடர்பு கொண்டு படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. யார் இசையமைத்தது? கனா படத்தின் இசையமைப்பாளரா? என கேட்டார். நான் ஆமா என சொன்னதும் யோவ் கனா படத்திற்கு போட்ட அதே இசையை தான் இந்த படத்திற்கும் போட்டுள்ளார் என கூறினார். மேலும் இசையமைப்பாளர் திபுவிடம் அடுத்த படத்திற்கு கொஞ்சம் மாத்திடுங்க திபு என வேண்டுகோள் விடுத்தார்.