டாப் நடிகையாக வளர்ந்ததினால் வருத்தத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… அப்படி என்னவா இருக்கும்!!
தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தெலுங்கில் “ரம்பட்டு” என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் “நீதானா அவன்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தொடக்க காலத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவினாலும் “அட்டக்கத்தி”, “ரம்மி”, “பண்ணையாரும் பத்மினியும்” போன திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக அறியப்பட்டார்.
அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “காக்கா முட்டை” என்ற திரைப்படம் அவரது கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்தார். அதன் பின் தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக “பூமிகா”, “தி கிரேட் இந்தியன் கிட்சன்”, “பூமிகா”, “ஃபர்கானா” போன்ற பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: “பேன் இந்தியால இந்த நல்ல படமெல்லாம் பார்க்கமுடியாது”… இவ்வளவு கோபத்தை அமீர் எங்க வச்சிருந்தாரோ??
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது டாப் நடிகையாக வளர்ந்தாலும், தான் மிகவும் வருந்துகிற ஒரு விஷயத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
“ஒரு காலத்துல யாராவது என் கிட்ட கதை சொல்ல வரமாட்டாங்களான்னு வெயிட் பண்ணிட்டு இருப்பேன். ஆனால் எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால், என்னால் இப்போது பல கதைகளை கேட்கமுடியவில்லை. நான் தொடர்ந்து படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் எனக்கு கதைகள் கேட்பதற்கு நேரமில்லை. ஆனால் நிறைய பேர் எனக்கு கதை சொல்லவேண்டும் என காத்திருக்கிறார்கள். அவர்களுக்காக கொஞ்ச நேரம் கூட ஒதுக்கமுடியவில்லை என்ற சின்ன வருத்தம் இப்போது இருக்கிறது” என அப்பேட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார்.