நடிச்சு நடிச்சு depression ஆயிட்டேன்...! ஐசு கேள்வியால் கலங்கிய பிரபல நடிகர்...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரை உலகில் நடிக்க தெரிந்த மிக சில நடிகைகளில் முக்கியமானவர். துணை நடிகையாக அறிமுகமாகி திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர்.அடுத்த வீட்டு பெண் போன்ற எதார்த்த அழகியான இவருக்கு நடிப்பு திறமை இயற்கையாக அமைத்தது.
ஏகப்பட்ட விருதுகளையும் அள்ளிக் குவித்தவர். தனக்கேற்ற கதைகளை சரியாக தேர்வு செய்து நடித்து அசத்துபவர். பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். இவரை பேட்டி கண்ட போது சினிமாவையும் தாண்டி ஏகப்பட்ட தகவல்களை நமக்காக பகிர்ந்துள்ளார்.
இவர் சிம்புவுடன் சேர்ந்து செக்கச் சிவந்த வானம் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அந்த சமயம் சிம்புவை நிறைய கலாய்த்துள்ளேன் எனக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் சிம்புவிடம் ஏன்? சூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வரமாட்டீங்களாமேனு கேட்க அதற்கு சிம்பு நான் சின்ன வயசுல இருந்தே நடிக்க வந்து இப்ப வரைக்கும் நடிப்பு நடிப்புனு என்னால சுத்தமா முடியல, அதனால எனக்கு பிரேக் தேவைப்படுது, அதனால் தான் இப்படியெல்லாம் என கூறினாராம். அத கேட்டதும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.