கறார் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்… பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்… இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாவா இருப்பாங்க??

by Arun Prasad |
Aishwarya Rajesh
X

Aishwarya Rajesh

தொடக்கத்தில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து தற்போது தமிழின் முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நடிக்க வந்த புதிதில் வழக்கமான கதாநாயகி பாத்திரங்களை ஏற்று நடித்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக பெண்களை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்ட கதைகளில் நடித்து வருகிறார். தற்போது கூட “டிரைவர் ஜமுனா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Aishwarya Rajesh

Aishwarya Rajesh

தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்து போன்ற பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து வரும் “டிரைவர் ஜமுனா” திரைப்படம் கூட தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில்தான் வெளியாகிறது. அந்தளவுக்கு அவரது மார்க்கெட் தற்போது உயர்ந்துள்ளது.

“டிரைவர் ஜமுனா” திரைப்படத்தை தொடர்ந்து “மோகன்தாஸ்”, “சொப்பன சுந்தரி”, “ஃபர்ஹானா” என பல திரைப்படங்களை கைக்குள் வைத்திருக்கிறார். விரைவில் இத்திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Aishwarya Rajesh

Aishwarya Rajesh

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போதெல்லாம் தனது சம்பள விஷயத்தில் கறாராக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு கோடி ரூபாய் கேட்கிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் அவரை படங்களில் புக் செய்ய தயக்கம் காட்டுகிறார்களாம்.

Priya Bhavani Shankar

Priya Bhavani Shankar

ஆதலால் தயாரிப்பாளர்கள் பலரும் பிரியா பவானி ஷங்கரிடம் கதை சொல்ல செல்கிறார்களாம். ஐஸ்வர்யா ராஜேஷை மனதில் வைத்து எழுதப்படும் பெண்களை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்ட கதைகள் பலவும் இவ்வாறு பிரியா பவானி ஷங்கருக்கு செல்கிறதாம். பிரியா பவானி ஷங்கரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இணையான நடிகையாக திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story